குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது.
குளித்தலை காவிரி ஆற்றில் நீர்வரத்து 63 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணைக்கு, மேட்டூரில் அதிகபட்சமாக இது நாள் வரை வெளியேற்றப்பட்ட, ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதுவே அதிகபட்சமாகும்.
இதனை அடுத்து மாயனூர் கதவணைக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகபட்சமாக வந்துள்ளது.
அதனை அப்படியே காவிரியில் வெளியேற்றப்பட்டது.
அந்த வகையில் குளித்தலை அகண்ட காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதுவே அதிகபட்ச தண்ணீராகும்.தற்போது மேட்டூரில் வெளியேற்றப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு, 70 ஆயிரத்து 500 கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருமா நிலையில், மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 63 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இதனை காவிரி ஆற்றில் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் குளித்தலை அகண்ட காவிரியில் 63 ஆயிரம் கன அடி தண்ணீர் காலை நிலவரப்படி சென்று கொண்டுள்ளது. மேலும் மேட்டூரில், 50 ஆயிரம் கன அடியாக குறைக்க வாய்ப்பு உள்ளதால்,
மேலும் குளித்தலை அகண்ட காவிரி ஆற்றில் தண்ணீர் 43 ஆயிரம் கன அடியாக குறைய வாய்ப்புள்ளது.
– நௌஷாத்,