சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி ! சமீபத்தில், ” தலை உருளும்…” என்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு கொலைமிரட்டல் விடுத்திருந்தனர், கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களான அவரது அடிப்பொடிகள்.

பின்னர், இன்ஸ்டாவில் பதிவிட்டது 18 வயதுக்கு கீழான சிறுவன் என்பதை கண்டறிந்து, அவனது எதிர்கால நலனை கருத்திற்கொண்டு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், அவனது பெற்றோர்களுடன் அவனை அழைத்து புத்திமதி கூறி அனுப்பி வைத்திருந்தார் எஸ்.பி. வருண்குமார்.

Sri Kumaran Mini HAll Trichy

இந்நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட ரவுடி துரை (எ) துரைசாமியின் ஆதரவாளர்கள், அதே பாணியில் எஸ்.பி.வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் எஸ்.பி.யாக பணியாற்றிவரும் எஸ்.பி.வந்திதாபாண்டே, திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமாரின் இணையரும்கூட. இருவருமே போலீசு பணியில் துணிச்சலான அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ரவுடி துரைசாமிக்காக கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி
ரவுடி துரைசாமிக்காக கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி

இந்த பின்னணியிலிருந்தே, திருச்சி எஸ்.பி.வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை எஸ்.பி.வந்திதாபாண்டே ஆகிய இருவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்து கொலைமிரட்டல் விடுத்திருந்தார்கள்.

Flats in Trichy for Sale

இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த 11.07.2024-ம் தேதி திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர்.நகர் துரை என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமரகாட்டில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் துரை (எ) துரைசாமி மற்றும் அவருடன் இருந்தவரை போலீசார் பிடிக்க சென்றபோது துரைசாமி போலீசாரை தாக்க முயன்றதால், தற்காப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் துரை (எ) துரைசாமி (எ) எம்.ஜி.ஆர் நகர் துரை இறந்துள்ளார்.

எஸ்.பி. வருண்குமார்.

இந்நிலையில், இறந்துபோன எம்.ஜி.ஆர் நகர் துரைசாமியின் ஆதரவாளர்கள் சில தினங்களுக்கு முன்பாக, இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில், “mgr-nagar- official” என்ற முகவரியில் இருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், இ.கா.ப., அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் “திருச்சியில் சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும்” என்ற பதிவை பகிர்ந்து பொதுமக்கள் மத்தியில் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், கலவரங்களை தூண்டும் விதத்திலும் இன்ஸ்டா ஸ்டோரி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மேற்படி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், ராஜபாண்டி வயது 21, த/பெ. ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.நகர், புத்தூர், திருச்சி என்பவர் தான் பதிவேற்றம் செய்துள்ளார் என தெரியவந்தது.

எனவே, மேற்படி ராஜபாண்டியினை சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தபோது, 29.07.2024-ம் தேதி குழுமணி உறையூர் சாலையில் உள்ள ராமநாதநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் ராஜபாண்டியை பிடிக்க சென்றபோது, ராஜபாண்டி பட்டாகத்தியை காட்டி மிரட்டியதால், அவர் மீது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 12.08.2024-ம் தேதி வரை நீதிமன்ற காவல் பெறப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.” என்பதாக தெரிவிக்கிறது, போலீசாரின் செய்திக் குறிப்பு.

மேலும், “இதுபோன்று, பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருப்பதோடு, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் பதிவேற்றம் செய்யப்படும் நபர்களை பற்றிய தகவல்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி எண் 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.” என்றும் அறிவித்திருக்கிறார், எஸ்.பி. வருண்குமார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.