அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘எல்.ஐ.கே’ 

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு “ ரெளடி பிக்சர்ஸ்’ நயன் தாரா & ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித்குமார், பாடல்கள், கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் : விக்னேஷ் சிவன், ஆர்ட்டிஸ்ட் : பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, கெளரி ஜி.கிஷன், யோகிபாபு, ஆனந்தராஜ், ஷா ரா, சுனில் ரெட்டி, மாளவிகா மிஷ்கின், சீமான், ஒளிப்பதிவு : ரவி வர்மன், இசை : அனிருத், எடிட்டிங் : பிரதீப் ஈ.ராகவ், ஸ்டண்ட் : பீட்டர் ஹெய்ன், தயாரிப்பு வடிவமைப்பு : முத்துராஜ், நிர்வாகத் தயாரிப்பாளர் : டிவ்ஸ் வேணுகோபால்,  காஸ்ட்யூம் டிசைனர்கள் : பிரவீன் ராஜா, ரினிபாந்த், ஜேகட் லீரிண்டியா, ஷங்ரிஹான், ஒலி வடிவமைப்பு : சுரேன் ஜி, & அழகிய கூத்தன், பி.ஆர்.ஓ : யுவராஜ்

16 ஆண்டுகள் கழித்து, அதாவது 2040-ல் கதை நடக்கிறது. தனது காதல் தோற்றுப் போனதால் ‘எல்.ஐ.கே.’ என்ற அதாவது லவ் இன்சூரன்ஸ் கம்பெனியை ஆரம்பிக்கிறார் சூரியன் [ எஸ்.ஜே.சூர்யா]. இவர் வடிவமைத்த ஹைடெக் டெக்னாலஜி செல்போனில் இதற்கென ஒரு ’ஆப்’ஐ உருவாக்குகிறார். இந்த ஆப்பில் கனெக்ட் ஆகி காதலை இன்சூரன்ஸ் பண்ணினால் உங்கள் லவ்வரின் [ இருபாலருக்கும்] லவ்வரின் மனப்பொருத்தம், காதலின் வெற்றிவாய்ப்பு இவற்றை கரெக்டாக ஸ்கெட்ச் போட்டு லவ்வை கண்டினியூ பண்ணலாம். எதுவுமே ‘மேட்ச்’ஆகலேன்னா பிரேக்கப் பண்ணிரலாம். இந்த ‘ஆப்’-பின் மெட்டாலிக் வாய்ஸ் கொடுப்பவர் ‘வைப் வஸ்ஸி’ என்கிற வாசுதேவன் [ பிரதீப் ரங்கநாதன்]. ஆனால் இவரது அப்பா சீமானோ,  செல்போனைக் கண்டாலே கடுப்பாவார். செல்போனால் மனநலம் குன்றியவர்களுக்காகவே ஆர்கானிக் செண்டர் நடத்தும் அளவுக்கு செல்போன் வெறுப்பாளர் சீமான். இதனால் வீட்டில் செல்போனை பயன்படுத்தமாட்டார் வாசு.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

L.I.K. movieஇதற்கு நேர் மாறானவர் நம்ம ஹீரோயின் தீமா [கீர்த்தி ஷெட்டி]. தினசரி ஒரு ஏதாவது ஒரு ரீல்ஸ் போடலேன்னா  சாப்பிடவே முடியாத கண்டிஷனில் இருப்பவர் கீர்த்தி. இவரின் அம்மா மாளவிகாவும் இதே நோயாளி தான். அப்படிப்பட்ட கீர்த்திய ஒரு நாள் மழை நேரத்தில் எதேச்சையாகப் பார்த்து அவரின் அழகில் மயங்கிச் சரிகிறார். இப்படி செல்போன் வெறுப்பாளருக்கும் செல்போன் விருப்பாளருக்கும் இடையே நடக்கும் காதல் காப்பீடு சடுகுடு சக்சஸ் ஆனதா? இதான் நம்ம கண்களுக்கு ஃபிரஷ்னெஸ் தரும் சீன்களுடனும் மனசை ஜில்லாக்கும் ஃபீலிங்குடனும் வந்திருக்கும் ‘எல்.ஐ.கே.’

2040 உலகத்தை உருவாக்கி, அதில் அதிநவீனமாக சென்னையைப் படைத்து, அந்த உலகத்தை திரையில் கொண்டு வர மிகவும் கடுமையாக உழைத்துள்ள படைப்பாளி விக்னேஷ் சிவனின் ‘விஷன்’ மெய் சிலிரிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட சென்னையில் வாழ்ந்தால் எப்படி இருக்கும்? என நம்மை ஏங்க வைக்கிறது விக்கியின் ஃபியூச்சரிஸ்டிக் விஷுவல் விஷன். அந்த 2040-லும் திருவள்ளுவர் ஐடி பார்க், பெரியார் லைப்ரரி, அண்ணாசாலை, இவையெல்லாம் அப்படியே தான் இருக்கும் என்பதைச் சொன்னதற்காகவும்  அதிநவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனையைக் காட்டியிருப்பதற்காகவும் விக்னேஷ் சிவனுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

‘வைப் வஸ்ஸி’ என்கிற வாசுதேவனாக பிரதீப் ரங்கநாதனிடம் படம் முழுக்க இருக்கும் சூப்பர் எனெர்ஜியும் அதன் துள்ளல் எஃபெக்ட், கீர்த்தியைப் பார்த்ததும் ஹார்ட் பீட் ஸ்டாப்பாகி ஆஸ்பத்தியிரியில் படுத்திருக்கும் போது கூட ஒருவித திமிர், எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால்விட்டு, எல்.ஐ.கே. ’ஆப்’பை ஒழித்துக்கட்டும் வேலைகளில் சின்சியராக இறங்கி அடிப்பது, அதன் பின் எஸ்.ஜே.சூர்யாவிடமே டைரக்டா மோதுவது, பிரேக்கப் சொன்னதும் கீர்த்தியிடம் உருகுவது என ஆல் ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

L.I.K. movieஇவருக்கு ஈகுவலாக மாஸ் காட்டி அடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ‘எல்.ஐ.கே.வின் சப்ஸ்கிரைபர் குறைய ஆரம்பித்ததும் இவர் போடும் பக்கா கிரிமினல் லவ் ப்ளான் வேற லெவல். பிரதீப்புடன் நேருக்கு நேர் உட்கார்ந்து இவர் பண்ணும் அலப்பறை சீன் செம கிளாஸ். 2040 என்ன 2080–ல கதை நடந்தாலும் அதுக்கும் மனுஷன் மேட்ச் ஆவாரு போல.

கீர்த்தி ஷெட்டி அழகோ அழகு, கவர்ச்சி அழகில் மயக்குகிறார். பெரும்பாலான சீன்களில் குட்டியூண்டு காஸ்ட்யூம் போட்டு ஜிவ்வேத்துகிறார். பிரதீப்பின் தோழியாக வரும் கெளரி கிஷனும் கீர்த்திக்கு சவால்விட்டு [ அட காஸ்ட்யூம் சைஸில் தாங்க] பேண்டீசைவிட கொஞ்சம் பெரிதான காஸ்ட்யூமிலும் சரக்கடிப்பதிலும் கதிகலங்க வைக்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வழக்கம் போல தமிழனாக சீமான். வெளிநாட்டு குளிர்பானத்தைக் குடிப்பதற்கும் நம்ம ஊரு இளநீரைக் குடிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை சீமான் சொல்லும் போது, “அட ஏப்பா நீ வேற” என பிரதீப் கொடுக்கும் கவுண்டர் அட்டாக் செம கலகலப்பு.

கீர்த்தியின் ‘ஓப்பன் ஃப்ரண்டாக’ யோகிபாபு. இந்த ஃப்ரண்ட்ஷிப்புக்கு அவர் சொல்லும் டெஃபெனேஷன் டீன் ஏஜ் யுவதிகளுக்கு கும்மாங்குத்து.

L.I.K.முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் டெக்னாலஜி எக்ஸ்பெர்ட்டுகளால் உருவாக்கப்பட்ட சென்னை, சீமானின் ஆர்கானிக் செண்டர், செல்போன்கள், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா  போட்டிருக்கும் கூலிங் கிளாஸ், மற்றும் கார்கள், ரோபோக்கள்,  மோனோ ரயில், உட்பட எல்லா சீன்களிலும் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். இந்த உலகத்தை தனது கேமரா கண்களால் பதிவு செய்து பிரமிக்க வைக்கிறார் ரவிவர்மன். பேக்ரவுண்ட் ஸ்கோரிலும் ‘தீமா…” பாடலிலும் அசத்திவிட்டார் அனிருத். இடைவேளைக்குப் பின்பு கொஞ்சம் டல்லடிக்குது இந்த பாலிஸி.

“ஹார்ட்டின் துடிப்பை ஒரு ‘ஆப்’ ஆல் கண்டுபிடிக்கவே முடியாது”. “லவ்வர்ஸுக்கு பிரேக்கப் இருக்கு, புருஷன் –பொண்டாட்டிக்கு இடையே டைவர்ஸ் இருக்கு”, ஆனா ஃப்ரண்ட்ஷிப்ல இந்த மாதிரியான வார்த்தையே கிடையாது” ரொம்பவும் அனுபவிச்சு வசனம் எழுதியிருக்கார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அதே போல் 2040—ல் லைக், கமெண்ட்ஸ், ஷேர் இவற்றுக்கான குறியீடுகளைக்கூட ஸ்பெஷலாக காட்டியிருக்கார் விக்னேஷ் சிவன்.

‘எல்.ஐ.கே’ ரொம்ப காஸ்ட்லியான விஷுவல் ட்ரீட் தான். பட் செம டேஸ்ட்.

அங்குசம் பார்வையில் ‘எல்.ஐ.கே’  60/100

—   ஆண்டவர்  

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.