அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘லீடர்’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ டைரக்டர்: ஆர்.எஸ்.துரை செந்தில் குமார். ஆர்ட்டிஸ்ட்: லெஜெண்ட் சரவணன், பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், அம்ரிதா ஐயர், பேபி இரன், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், விடிவி. கணேஷ், ஐஸ்வர்யா, ஆதித்யா கதிர், படவா கோபி, விஜயலட்சுமி ஜெய ஸ்மித்ரா, அறந்தாங்கி நிஷா. ஒளிப்பதிவு: எஸ்.வெங்கடேஷ், இசை: ஜிப்ரான் வைபோதா, எடிட்டிங்: பிரதீப் ஈ.ராகவ், ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ, ஆர்ட் டைரக்டர்: ஜி.துரைராஜ், காஸ்ட்யூம் டிசைனர்: தீப்தி & பூர்த்தி பிரவீன்,காஸ்ட்யூமர்: பி.ரெங்கசாமி,  பிஆர்ஓ: நிகில் முருகன்

தூத்துக்குடியில் விடிவி கணேஷ் நடத்தும் கார் மெக்கானிக் செண்டரில் பெரிய மெக்கானிக்காக இருக்கும்  சக்திவேல் [லெஜெண்ட் சரவணன்] தாயை  இழந்த தனது பெண் குழந்தை மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். தாய்லாந்தில் பெரிய மாஃபியாவாக இருக்கும் சந்தோஷ் பிரதாப்பின் அடியாள் பாகுபலி பிரபாகர். தூத்துக்குடி துறைமுகமே இவரின் கையில் தான். அங்கிருந்து சட்டவிரோதமாக பெரிய கண்டெய்னர்களில் சரக்கு கடத்துகிறார். இதை ஸ்மெல் பண்ணும் இன்ஸ்பெக்டர் இந்திராணி சத்யமூர்த்தி [ ஆண்ட்ரியா] டிஐஜியிடம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை. அந்த நேரத்தில் புதிதாக வரும் எஸ்.பி.பக்தவத்சலத்திடமும் [ ஷாம்] சொல்லிப் பார்த்து அதுவும் சரிப்பட்டு வராததால், லேடி கான்ஸ்டபிளை டீ விற்பவராக துறைமுகத்த்துக்குள் அனுப்பி வேவு பார்க்கிறார். இன்னொரு பக்கம் துறைமுகத்துக்குள் சர்வசாதாரணமாகப் போய் வரும் சரவணனிடமும் உதவி கேட்டுப் பார்த்து, அவர் மறுக்க, அம்மோனியம் கார்ப்பரேட்டை கண்டெய்னரில் கடத்தியதாக சரவணனை கைது செய்கிறார். இதற்கடுத்து சரவணனின் குழந்தையும் கடத்தப்படுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

லீடர்ஆண்ட்ரியாவின் இந்த அதிரடிக்கு பலன் கிடைத்ததா? சரவணன் என்பவர் யார்? அவரின் மனைவி [ பாயல் ராஜ்புத்] என்னவானார்? இதற்கான க்ளைமாக்ஸ் தான் இந்த இரண்டேகால் மணி நேர ஸ்பை த்ரில்லர் சூப்பர் ஜெட் ஸ்கிரிப்டில் இருக்கு.

முதல் படமான ‘லெஜெண்ட்’டைவிட இந்த இரண்டாவது படம் ‘லீடரில்’ நடிப்பிலும் சில ஆக்‌ஷன் சீக்வென்ஸிலும் ரொம்பவே முன்னெறியிருக்கிறார் சரவணன். நூறு-இருநூறு பேரை அடித்து துவைத்து வானத்தில் பறக்கவிட்டு, தரையில் தீப்பொறி பறக்க நடந்து வரும் ஓவர் பில்டப்போ…அது முடிந்ததும் பல ஆயிரம் பேர் கூடிக்கும்மியடித்து ‘வல்லவரு…நல்லவரு….கெட்டவர்களை அழிக்கப் பிறந்த லீடரு….”ன்னு சரவணன் புகழ் போற்றும் பாடலோ இல்லாமல் கதையின் போக்கிலேயே பயணிக்கிறார் லீடர் சரவணன். பாயல் ராஜ்புத்துடனான லவ் எபிசோட், குழந்தையுடன் செண்டிமெண்ட் எபிசோட், கண்டெய்னர் சேஸிங், எலாரிஜியா நாட்டில் அதிரடி மீட்பு ஆபரேஷன் ஆக்‌ஷன் எபிடோட் என எல்லா ஏரியாவிலும் அதிக உயரத்திற்கு ஆசைப்படாமல்,  தனக்குரிய நடிப்பு மீட்டரின் உயரத்திற்கேற்றவாறு பொருந்திப் போயிருக்கிறார் லெஜெண்ட் சரவணன். அடுத்தடுத்த படங்களில் இதைவிட கொஞ்சம் உயரத்திற்குப் போய் படிப்படியாக பயணிப்பார் என நம்புவோம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

லீடர்இந்தப் படத்துக்கு ஏன் ‘லீடர்’னு டைட்டில்? சரவணன் எப்படி லீடர் ஆனார்ங்கிறதுக்கு பக்காவான கதையையும் படு ஸ்பீடான திரைக்கதையையும் வடிவமைத்து தான் ஒரு ஆக்‌ஷன் எண்டெர்டெய்ன்மெண்ட் க்ய்ராண்டி  டைரக்டர் என்பதை புரூஃப் பண்ணியிருக்கார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். படத்தின் முதல் சீனிலிருந்தே எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது. எஸ்.பி.யாக ஷாம் எண்ட்ரியான பிறகு,  வில்லன் சரவணனா? இல்ல சந்தோஷ் பிரதாப்பா? இல்ல ஆண்ட்ரியாவா? சந்தோஷ் பிரதாப்புக்கும் ஆண்ட்ரியாவுக்கும் இடையே என்ன உறவு? இதையெல்லாம் சால்ட் [ பாகுபலி பிரபாகர்] கேரக்டருடன் முடிச்சுப் போட்டு க்ளைமாக்ஸ் நெருங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை பக்காவாக ஸ்கிரிப்டை டெம்போ ஏற்றியுள்ளார் டைரக்டர் துரை செந்தில்குமார்.

அதே போல் சரவணனின் ஃப்ளாஷ்பேக், அதில் பாயல் ராஜ்புத்துடனான காதல், கல்யாணம், பெண் குழந்தை பிறப்பு இதையெல்லாம் வழவழன்னு இழுக்காமல்  நச்சுன்னு சொல்லியிருக்கிறார் டைரக்டர். ஆண்ட்ரியாவின் அப்பா சத்யமூர்த்தி [ லால்]க்கும் சரவணனுக்கும் என்ன சம்பந்தம் என்பதை எலார்ஜியா நாட்டில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மாணவர்களை மீட்கும் அதிரடி ஆபரேஷனில் சரவணனும் பாயல் ராஜ்புத்தும் இறங்கும் ஃப்ளாஷ்பேக்குடன் கச்சிதமாக லிங்க் பண்ணிவிட்டார் டைரக்டர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹைடெக் வில்லனுக்கு பொருத்தமாக இருக்கிறார் சந்தோஷ் பிரதாப். நேர்மையான எஸ்.பி.யாக இருந்து சஸ்பென்சன் பனிஷ்மெண்ட் கிடைத்ததும் ஆத்திரமடைந்து ஆண்ட்ரியாவையும் அவரின் அப்பா லாலையும் துப்பாக்கி முனையில் மிரட்டுவது, உண்மை தெரிந்ததும் சரவணனுடனேயே கை கோர்ப்பது என ஷாமின் பெர்ஃபாமென்ஸும் சூப்பர். அம்ரிதா ஐயருக்கு இரண்டு சீன்கள் என்றாலும் கதையின் மெயின் லைக்கு உதவியிருக்கார்.

லீடர்சரவணனின் முதலாளியாக விடிவி கணேஷின் டிரேட்மார்க் டயலாக் சில சீன்களில் கலகப்புக்கு உதவுகிறது. பாயல்ராஜ்புத்தின் அம்மாவாக ஐஸ்வர்யா, சரவணனின் பக்கத்துவீட்டுப் பெண்ணாக அறந்தாங்கிநிஷா ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி ஹார்பரில் கார் சேஸிங், அதைத் தொடர்ந்து கண்டெய்னர் சேஸிலிங், எலார்ஜியா நாட்டில் கன் ஃபைட் இவற்றில் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூவும் கேமராமேன் வெங்கடேஷும் கைகோர்த்து சிலிர்க்க வைக்கின்றனர். எப்போதுமே பின்னணி இசையில் மென்மையைக் கையாளும் ஜிப்ரான், இதில் கொஞ்சம் ஓவராக இசைத்துவிட்டார். க்ளைமாக்ஸ் வந்தே பாரத் ரயிலில் நடக்கும் ஸ்டண்ட் சீக்வென்ஸ் கொஞ்சம் நீளமாகப் போய்விட்டதைக் கவனித்து கத்திரி போட்டிருக்கலாம் எடிட்டர் பிரதீப் ராகவ்.

மொத்தத்தில் பக்கா மாஸ் எண்டெர்டெய்னர் தான் இந்த லீடர்.

‘வி ஆர் வெயிட்டிங் ஃபார் ‘லீடர்-2’

அங்குசம் பார்வையில் ‘லீடர்’ 65/100

—    ஆண்டவர் 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.