அறிவுசால் இயக்கத்திற்கு புதை குழி ! சீரழியும் நூலகத்துறை !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கோவை பெரியார் அறிவுலகத்திற்கு முறைகேடாக கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் குறித்த பெருமாள் முருகனின் கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த தி.மு.க அரசு வெளிப்படையான நூலக கொள்முதல் கொள்கையை செயல்படுத்தி பொது நூலகத்துறையை சூறையாடி வந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு முடிவு கட்டிய சூழலில் இப்போது ஒரு ஊர் பேர் தெரியாத பதிப்பகத்திடம்  பெரும் தொகைக்கு போலி நூல்கள் பெரியார்  அறிவுலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கும் செய்தி பொது நூலகத்துறையை காலகாலமாக சீரழித்துவந்த சக்திகள் மீண்டும் களத்திற்கு வந்திருப்பதையே காட்டுகிறது. சில அதிகாரிகள்- சில பதிப்பாளர்களின் கூட்டின் மூலமே இது நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

மனுஷியபுத்திரன்
மனுஷியபுத்திரன்

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்நிலையில் கீழ்கண்ட உடனடி நடவடிக்கைகள் தேவை

  1. பெரியார் அறிவுலகம் போன்ற சிறப்பு நூலகங்களுக்கு நூல்கள் கொள்வது செய்யப்பட்டதற்கு பொதுவான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்பட்டதா என்பதைக் கண்டறிய வேண்டும்.
  2. வாங்கப்பட்ட நூல்கள் எந்த தரத்தினாலானது என்பதை மதிப்பிடுவதற்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

3.போலி முகவரி அல்லது போலி ISBN மூலமாக நூல்கள் விநியோகிக்கப்பட்டு இருந்தால் அந்த பதிப்பகத்தின் மேல் உடனடியாக                   சட்ட நடவடிக்கை தேவை.

  1. சந்தேகத்திற்கு இடமான வகையில் ஏதேனும் ஒரு பதிப்பகத்தின் நூல் அதிக அளவில் வாங்கப்பட்டிருந்தாலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலோ அந்த நூலக ஆணையை வழங்கிய அதிகாரிகள் மேல் நடவடிக்கை தேவை.
  1. பிழையான, போலியான புத்தகங்களை வழங்கிய பதிப்பாளருக்கு வழங்கப்பட்ட நூலக ஆணை ரத்து செய்யப்பட்டு அந்தப் பணம் திரும்பப்பெறப்பட்டு அந்த நூல்கள் நூலகத்திலிருந்து அகற்றப்படவேண்டும்.

எங்களைப் போன்ற பதிப்பாளர்கள் ஒரு புத்தகத்தை உருவாக்குவதற்கும் அதை விற்பதற்கும் படாதபாடுபட்டு செத்துக்கொண்டிருக்கிறோம். சில நூறு புத்தகங்களை விற்பதற்காக ஊர் ஊராய் புத்தகக் கண்காட்சிகளைத் தேடி அலைகிறோம். ஆனால் சில வழிப்பறிக்கொள்ளையர்கள் அசலான பதிப்பகங்களுக்கு வரவேண்டிய நூலக ஆணைகளை பறித்துக்கொள்வதுடன் நூலகங்களை குப்பைக் கிடங்காக்கி அறிவு சால் இயக்கத்திற்கு புதைகுழி தோண்டுகிறார்க.

 – மனுஷியபுத்திரன், எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.