அரிசி விலை உயர்வும் பதுக்கலும் !
தமிழகத்தில் அரிசி விலையுர்வுக்கு பதுக்கலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாகவும்; அரிசி பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார் மக்கள் நீதிமையத்தின் திருச்சி மாவட்ட செயலரும் வழக்கறிஞருமான S.R.கிஷோர்குமார்.
”ஒவ்வொரு குடோன்களிலும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்புக்கும் ஒரு வரையறை உண்டு. அதற்கு பதிவேடுகளும் உண்டு. ஆனால் அதனை பெரும்பாலான தொழிலதிபர்கள் பின்பற்றுவதே கிடையாது. தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்வதும் கிடையாது. ஏனெனில் ஆலை உரிமையாளர்கள் பெரும்பாலானோர் கோடிஸ்வரர்கள். எப்பொழுதுமே சட்டம் கடுமையாக தான் இருக்கும். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் அரசு எந்திரங்களான அரசு அதிகாரிகள் சிலர் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொள்வதால் இந்த அவலங்கள் சாமானியன் தலையில் விழுகின்றன.
மேலும், தற்பொழுதைய பண்டிகை காலங்களில் அரிசி விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் செயற்கையான விலையுவர்க்கு பதுக்கலும் ஒரு மிக முக்கிய காரணம் என நியாயமான வியாபாரிகளை தெரிவிக்கின்றனர். ஆனால், பதுக்கலை தடுக்க வேண்டிய அரசு தடுக்க தவறுவது தனக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்.” என்பதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார், அவர்.
– அங்குசம் செய்திப்பிரிவு.





Comments are closed, but trackbacks and pingbacks are open.