சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை !
திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பனாம்பட்டி பகுதியைச் சேரந்த முரளி 32/20, த.பெராஜகோபால் என்பவர் அவரது நண்பர்களான பூபதி 17/20 த.பெ.தங்கராசு. வடக்குத் தெரு கருப்பனாம்பட்டி. தொட்டியம் தாலுக்கா மற்றும் சிலருடன் சேர்ந்து கடந்த 13.10.2020 ம் தேதி முள்ளிப்பாடியில் நடைபெற்று கொண்டிருந்த கபடி போட்டியில் பங்கேற்பதற்காக கொளக்குடிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு குடிபோதையில் வந்த பிரபு 22/20 (தொட்டியம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி), த.பெ.தங்கம். குடித்தெரு. கருப்பனாம்பட்டி, தொட்டியம் தாலுக்கா என்பவர் மேற்படி முரளி மற்றும் அவருடைய நண்பர்களை பார்த்து எங்கே செல்கிறீர்கள் என கேட்டும். அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி அவர் வைத்திருந்த கத்தியால் முரளி என்பரை குத்தி அங்கே இருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் பலத்த காயமடைந்த மேற்படி முரளி என்பவர் சிகிச்சைகாக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் 19:10.2020 ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக பூபதி என்பவர் கொடுத்த . 1143/20, U/s 294(b), 307, 506(ii) IPC @ 294(b), 506(ii). 302 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக சக்திவேல் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் (27.03.2026) திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் எதிரி பிரபு 22/20, த.பெ.தங்கம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 11,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த தொட்டியம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் வளர்மதி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.