இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பனாக அவ்வளவு எளிதில் கடந்து விடும்படியாக இல்லை….

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தன் கணவனிடமிருந்து விவாகரத்து பெற விரும்பியவர் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு குறித்த அடுத்த நகர்வே இது. இதில் கருத்து கூறவவோ, ஆலோசனை வழங்கவோ, தீர்வுகளை நோக்கி அவர்களை நகர்த்தவோ நம்மில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

நீண்ட நெடிய காலம், நிறைய யோசித்து, பல முயற்சிகளை செய்து இனியும் சாத்தியம் இல்லை என்ற நிலையில்தான் இந்த முடிவுக்கு அவர் வந்து சேர்ந்திருப்பார்.

அவர் வாழ்வு குறித்து எதுவும் தெரியாத நாம் இதில் மூக்கை நுழைப்பது அவசியம் இல்லாதது.

இது போன்ற நிகழ்வுகளில் இப்போது வரை ஊடகங்கள் தான் சம்பந்தப்பட்ட இருவரின் படுக்கை அறை வரை போய் செய்திகளை சேகரித்து லைவ் நியூஸ் & பிரேக்கிங் நியூஸ் போட்டு தங்களின் வருவாயை அறமற்ற முறையில் பெருக்கிக் கொண்டிருந்தனர்.

இப்போது கூடுதலாக நடிகர் விஜயின் ரசிகர்களாக இருந்து இன்று அவரோடும், அவருக்காகவும் அரசியலில் பயணிப்பதாய் நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கூட்டம் நீதிமன்றத்தை நாடி இருக்கும் பெண் குறித்து எழுதும் பதிவுகளை, உதிர்க்கும் காணொளி கருத்துக்களை அவ்வளவு எளிதாக கடந்து விட இயலவில்லை.

அரசியல் படுத்தப்படுவதற்கு முன்பாக கொஞ்சம் அறிவோடும், கொஞ்சம் அறத்தோடும் இருக்க வேண்டிய அவசியத்தை இளைஞர்கள் உள்ளிட்ட அந்தக் கட்சியின் பெரும் கூட்டத்திற்கு கற்பிக்க வேண்டிய பொறுப்பு அதன் தலைவராக இருக்கும் விஜய்க்கு இருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரத்தில் அரசியல் சதி?அவர் அதை அறிந்திருக்கிறாரா? இந்த கருத்தை ஏற்றுக் கொள்வாரா?  செயல்படுத்துவாரா நமக்கு தெரியாது.

இன்னொரு பக்கம் விஜயின் மனைவிக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற பெயரிலோ அல்லது இதுதான் சந்தர்ப்பம் என்ற வகையிலோ அந்த நடிகை நோக்கி இதே அறமற்ற, ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற வசவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறது இன்னொரு பெருங்கூட்டம்.

இரண்டு நிகழ்வுகளிலும் பெண்களை நோக்கியே தம்முடைய கைகளை உயர்த்துவது நியாயம் இல்லை.

இந்த அறமற்ற, அறிவற்ற, பொறுப்பற்ற பெரும் கூட்டத்தை ஒழுங்கு செய்ய வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் நிச்சயம் இருக்கிறது.

ஏனென்றால் நம் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் பெண் குழந்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் இந்த சமூகத்தில் இந்தக் கூட்டத்தோடு தான் வாழ்வார்கள்.

இரண்டு பெண் பிள்ளைகளின் அப்பனாக அவ்வளவு எளிதில் கடந்து விடும்படியாக இல்லை எதிர்ப்படும் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு பதிவும்.

—  வளவன் வசந்தா சித்தார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.