சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜…. -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ …

மங்களம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து Inspector பேசினாரு .... Ins - பிரதர் நீங்க கல்யாணம் செஞ்சு வச்ச அனிதாவ அவுங்க வீட்ல பார்க்கனும்னு சொல்றாங்க ....

0

சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜…. -என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ …

மங்களம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து Inspector பேசினாரு ….

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

Ins – பிரதர் நீங்க கல்யாணம் செஞ்சு வச்ச அனிதாவ அவுங்க வீட்ல பார்க்கனும்னு சொல்றாங்க ….

Me – சார் அதான் அன்னைக்கே பார்த்துட்டாங்களே சார் ….‌leagal ah எல்லா formalitiesம் முடிஞ்சிடுச்சே சார் …. திரும்ப எதுக்கு சார் ????

- Advertisement -

Ins – ஆமா பிரதர் நீங்க சொல்றது சரிதான் …. அவுங்க எதோ விடுதலை பத்திரத்தில கையெழுத்து வாங்கனும்னு சொல்றாங்க …. அப்டியே பொண்ணையும் பார்க்கனும்னு சொல்றாங்க பிரதர் ன்னு சொன்னாரு ….

பத்திரத்தில கையெழுத்து வாங்கித் தர்றதுலாம் போலீஸோட வேலை இல்லன்னும், அவுங்களுக்கு ரைட்ஸ் இல்லன்னும் நமக்கு தெரியும் ….

இருந்தாலும் பெத்தவங்க பொண்ண பார்க்கனும்னு ஆசப்படுறாங்க …. அதனால அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லி, அந்தப் பொண்ணோட முடிவுக்கு விட்டுடலாம் ன்னு நினைச்சி அந்தப் பொண்ணுக்கு கால் பண்ணி inspector சொன்னதெல்லாம் சொன்னேன்…

சொல்லிட்டு “பாப்பா சொத்துங்கிறது உன்னோட உரிமை, உன்னோட முடிவு …. அதுல நீ தான் மா முடிவு எடுக்கனும் …. கையெழுத்து போடுவதும், போடாததும் ங்கிறது உன்னையச் சார்ந்தது, அதுல நாங்க தலையிட மாட்டோம் …. அதெல்லாம் தாண்டி உன்னப் பெத்தவங்க உன்ன பார்க்கனும்னு ஆசப்படுறாங்க மா …. என்னைப் பொறுத்தவர அவுங்கள பார்க்க நீ வந்தா நல்லாருக்கும் மா, உங்களுக்கு எதுவும் ஆகாது, நாங்க இருக்கோம்” ன்னு சொன்னேன் ….

அந்தப் பெண்ணும் “சரிங்க ண்ணா நானும் கணவரும் வரோம்” ன்னு சொன்னுச்சி ….

தம்பி நமச்சிவாயத்துக்கிட்ட “தம்பி நாம சொத்துக்காக பொண்ண கூப்டு வரல, பொண்ணுக்காக பொண்ணோட அன்புக்காக மட்டும் தான் தம்பி அந்தப் பொண்ண கூப்டு வந்தோம், அதனால அந்தப் பொண்ணு என்ன முடிவு எடுக்குதோ எடுக்கட்டும், கையெழுத்து போடனுமா, வேணாமான்னு அந்தப் பொண்ணே முடிவு எடுக்கட்டும், நாம அதுக்கு உடன் படுவோம்” ன்னு சொன்னேன்

4 bismi svs

அந்த தம்பி ” ஆமா ண்ணா, நீங்க சொல்றது சரி தான் ண்ணா, பாப்பாவ நா சொத்தப் பார்த்து லாம் கல்யாணம் பண்ணல ண்ணா, எனக்கு எதுவுமே வேண்டாம் ண்ணா, பாப்பாவ நா நல்லா பார்த்துக்குவேன் ண்ணா, என்னால அனிதாவுக்கு என்ன வேணுமோ அத எல்லாத்தையும் என்னால கொடுக்க முடியும் ண்ணா” ன்னு சொன்னான் …. சபாஷ் டா தம்பி ன்னு சொல்லிட்டு

Inspector க்கு கால் பண்ணி “சார் எங்க ஊரு police station க்கு வந்துடுங்க சார் …. நா தம்பி – தங்கச்சிய ( மணமக்கள ) கூட்டிட்டு வந்துடுறேன்” ன்னு சொன்னேன் ….

அவரும் “சரிங்க பிரதர் எங்க station SI ஒருத்தர் வருவாரு, அவுங்களும் வருவாங்க, பாருங்க” ன்னு சொன்னார் ….

சொன்னபடியே பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன்ல சந்திச்சோம் …. பெண் வீட்டார், பொண்ணுக்கிட்ட அழுதாங்க …. பேசினாங்க …. எல்லாம் பேசிட்டு கடைசியா கையெழுத்து வேணும்னு ரெண்டு மூணு பத்திரத்த காண்பிச்சாங்க …. நா மனசுக்குள்ள சிரிச்சேன் …. கடைசில எல்லாமே பணம் தான் போலன்னு ….

அனிதா “நா உங்கள அசிங்கப்படுத்தனும்னு லாம் பண்ணல, வீட்ல நாங்க தான் சொன்னோமே, நீங்க தான் கூடாது, முடியாது ன்னு சொன்னீங்க, அதனால தான் நாங்க இந்த முடிவ எடுத்தோம், நா நல்லா இருக்கேன், என்னைய அவரு நல்லா பார்த்துக்குறாரு, எனக்கு உங்க சொத்து எதுவுமே வேண்டாம்” ன்னு சொல்லி, கையெழுத்துப் போட்டுட்டு வந்துச்சி …. சபாஷ் டா தங்கச்சி ன்னு சொல்லிட்டு பத்திரமா கூட்டிட்டு வந்து, வழியனுப்பி வைத்தோம் …. எனக்கும் நிறைவா இருந்துச்சி ….

நமச்சிவாயம் – அனிதா உங்க மனசுக்கு, எண்ணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க, நீங்க நல்ல இடத்துக்கு வர்ற வரைக்கும், உங்க வீட்டு ஆளுங்க கூட சேர்ற வரைக்கும் எனக்கு தினமும் கால் பண்ணனும், எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லனும்னு சொல்லி அறிவுறுத்தியிருக்கேன் …. சரி தானே மக்களே ….

ஆனா இதுல இன்னொரு சோகம் என்னன்னா அவுங்க கையெழுத்து வாங்கினது எதுவுமே சட்டப்படி செல்லாது ங்கிறது தான் …. இருந்தாலும் சொத்து தான் முக்கியம், பொண்ணு முக்கியமில்ல ங்கோ 😜….

என்றென்றும் காதல் வாழ்க 💙❤️ ….

முகநூலில் – S Sathyaprabu Selvaraj

அங்குசம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அங்குசம் வாட்சாப் குழுவில் இணைந்து கொள்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.