தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த பாதையும் – இன்றைய நிலையும் !

0

அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே ... தொடர்பு எண் - 9488842025 அங்குசம் இதழ் டிசம்பர் 1-15 (2023) இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள்

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி – கடந்து வந்த பாதையும் – இன்றைய நிலையும் !

திருச்சி என்னும் மாநகர் மாநிலத்தில் மையத்தில் உள்ளது என்ற சிறப்புக்குரியது. திருச்சி மாவட்டம் சாதி, மத மோதல்கள் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழும் பகுதி என்ற பெருமையையும் கொண்டது என்றால் மிகையில்லை. அரசியல்கட்சிகள், அரசியல், என மையப்புள்ளியாக திருச்சி இருக்கிறது.

 

2
 நடிகர் எம்.ஜி.ஆர் :
நடிகர் எம்.ஜி.ஆர் :

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

3

தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார்.
இதற்காக 1983-ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார். அதனால் தற்போது வரை திருச்சி அரசியல்கட்சிகளுக்கும், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எப்போதும் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கும் என்பதால் மாற்று கருத்து இல்லை.

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, திருவரங்கம், திருச்சி1, திருச்சி 2, திருவெறும்பூர் ஆகியவையாகும். திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டது. கந்தர்வக்கோட்டை (தனி) புதிதாக வந்தது. லால்குடி, முசிறி நீக்கப்பட்டது. புதுக்கோட்டை இணைந்தது.

4
Trichy MP Map
Trichy MP Map

தற்போது திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, என 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியது.

1951 – டாக்டர் . மதுரம் –

சுயேச்சை., ( திருச்சி )

1957 – எம். கே. எம். அப்துல் சலாம் –

இந்திய தேசிய காங்கிரஸ், ( திருச்சி )

1962 – கே. ஆனந்த நம்பியார்-

சி.பி.ஐ,  ( திருச்சி )

1967 – கே. ஆனந்த நம்பியார் –

சி.பி.ஐ ( திருச்சி )

1971 – மீ. கல்யாணசுந்தரம் –

சி.பி.ஐ –  ( குளித்தலை )

1977 – மீ. கல்யாணசுந்தரம் –

சி.பி.ஐ  ( குளித்தலை )

1980 – என். செல்வராஜ் –

தி.மு.க ( திருச்சி )

1984 – அடைக்கலராஜ் –

இந்திய தேசிய காங்கிரஸ் ( திருச்சி )

1989 – அடைக்கலராஜ் –

இந்திய தேசிய காங்கிரஸ் ( திருச்சி )

1991 – அடைக்கலராஜ் –

இந்திய தேசிய காங்கிரஸ்

1996 – அடைக்கலராஜ் –

த.மா.கா. ( திருச்சி )

1998 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் –

பிஜேபி ( திருச்செங்கோடு )

1999 – ப. ரங்கராஜன் குமாரமங்கலம் –

பிஜேபி ( திருச்செங்கோடு )

2001 – தலித் எழில்மலை –

அதிமுக  ( செங்கல்பட்டு – மதுராந்தகம் )

2004 – எல். கணேசன்- ம.தி.மு.க.

( தஞ்சை – ஒரத்தநாடு )

2009 – ப. குமார் –

அதிமுக ( கந்தர்வகோட்டை )

2014 – ப. குமார் – அதிமு.க

( கந்தர்வகோட்டை )

2019 – சு. திருநாவுக்கரசர் –

இந்திய தேசிய காங்கிரஸ் ( புதுக்கோட்டை )

Trichy MP News
Trichy MP News

திருச்சி எம்.பி. தொகுதியில்  2004 ஆண்டு மதிமுக சார்பில் தஞ்சை ஓரத்தநாடுவை சேர்ந்த எல்.கணேசன் போட்டியிட்டு தமிழ்நாட்டிலே திமுக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதிகளில் திருச்சியும் ஒன்று.

இதையடுத்த எம்.பி. தொகுதி சீரமைப்புக்கு பிறகு குறிப்பாக திருச்சி எம்.பி தொகுதியில் புதுக்கோட்டை  மற்றும் கந்தர்வகோட்டை இணைத்த போது,  குறைந்த எண்ணிக்கை உடைய சமூகமாக இருந்தாலும், திமுக, அதிமுக கட்சிகளின்  தலைமையில் முக்குலத்தோர் சமூகம் அதிகாரமிக்கவர்களான தொடர்ச்சியாக இருப்பதால்  அந்த சமூக ஆட்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இது மற்ற  சமூக மக்களிடையே கொஞ்சம் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளும் திருச்சியின் வளர்ச்சிக்கு எதையும் குறிப்பி தகுந்த அளவில் செய்ய வில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது..  இருந்த போதிலும் இந்த முறையும் 2024 எம்.பி. தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அதே முக்குலத்தோர் சமூக பிரபலங்களையே அரசியல் கட்சியினர் தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave A Reply

Your email address will not be published.