‘லவ் மேரேஜ் சக்சஸ்! பிரச்சனையில் சிக்கிய  விக்ரம் பிரபு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் சுவேதா ஸ்ரீ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சண்முக பிரியன்   இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து ஜூன்.27-ல் ரிலீசானது ‘லவ் மேரேஜ்’. பட ரிலீசுக்கு முன்பும் பின்பும் டைரக்டர் சண்முக பிரியன், ஹீரோ விக்ரம் பிரபு, ஹீரோயின் சுஷ்மிதா பட், நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களில் ‘லவ் மேரேஜ்’ ரிலீசான தியேட்டர்களுக்குச் சென்று புரமோஷன் பண்ணி, ரசிகர்களின் அன்பு மழையில் திக்குமுக்காடினார்கள். இதனால் இரண்டாவது வாரத்திலும் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருப்பதால் மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லும் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது படக்குழு.

நிகழ்ச்சியில் ஹீரோயினுக்கு தாய்மாமனாக நடித்த முருகானந்தம், விக்ரம் பிரபுவுக்கு மாமாவாக நடித்த அருள்தாஸ், மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், படம் ரிலீசாக பெரிதும் துணை நின்ற மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன், ‘லவ்மேரேஜை’ வினியோகம் செய்த ’சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன் ஆகியோர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திப் பேசினார்கள். அதிலும் யுவராஜ் கணேசன், ”இப்படத்தின் டைரக்ட்ர் சண்முக பிரியனின் அடுத்த படம் எங்க கம்பெனிக்குத் தான்” என்றதும் டைரக்டரின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

Sri Kumaran Mini HAll Trichy

சுஷ்மிதா பட்,
சுஷ்மிதா பட்,

ஹீரோயின் சுஷ்மிதா பட்,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

“படம் ரிலீசான பிறகு விக்ரம் பிரபுவுடன் தியேட்டர்களுக்குச் சென்ற போது ரசிகர்கள் காட்டிய அன்பு எங்களை சந்தோஷப்படுத்தியது. படம் பார்த்த அனைவருமே ரொம்ப நாள் கழிச்சு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பார்த்த படம் இதான் என்றனர்.. என்னுடைய கேரக்டரை நேர்த்தியாக வடிவமைத்த டைரக்டருக்கும் ஆதரவு காட்டிய தயாரிப்பாளர் சுவேதாவுக்கும் ஹீரோ விக்ரம் பிரபுவிற்கும் நன்றி”.

இன்னொரு ஹீரோயின் மீனாட்சி தினேஷ்,

மீனாட்சி தினேஷ்
மீனாட்சி தினேஷ்

“தமிழில் நல்லதொரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. ராதா என்கிற எனது கேரக்டரின் தன்மையை உணர்ந்து மகிழ்ச்சியுடன் நடித்தேன்”.

Flats in Trichy for Sale

டைரக்டர் சண்முக பிரியன்,

“இந்தக் கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒத்துக் கொண்ட  எனது முதல் ஹீரோ விக்ரம் பிரபு சார், ஹீரோயின்கள் சுஷ்மிதா, மீனாட்சி தினேஷ், நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணிய சக்திவேலன் சார், எல்லாவற்றிற்கும் மேலாக எனது தயாரிப்பாளர் சுவேதா மேடம், என்னுடன் ஒத்துழைத்த சக நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி.

சண்முக பிரியன்
சண்முக பிரியன்

இப்படத்தைப் பார்த்த பிரபு சார், “என் மகனை நல்லா நடிக்க வச்சிருக்க” என பாராட்டினார். அதுதான் எனக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனது படங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மீடியாக்களைக் கேட்டுக் கொள்கிறேன்”.

ஹீரோ விக்ரம் பிரபு,

“நான் நடித்த ‘இறுகப்பற்று’ படத்தைப் பார்த்த பின் தான் இந்தக் கதையுடன் என்னிடம் வந்ததாக டைரக்டர் சொன்னார். அதற்காக அவருக்கும் தயாரிப்பாளர் சுவேதாவிற்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏன்னா ‘டைப் காஸ்ட்’ பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவன்.

விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு

இப்படம் ரிலீசான பிறகு ஆயிரக்கணக்கானவர்களின் அன்பை சம்பாரிச்சிருக்கேன். மீடியா நண்பர்களும் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள். மீண்டும் ஒருமுறை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி”.

 

—   மதுரை மாறன்   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.