அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: டி.ஸ்டுடியோஸ், மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், டைரக்டர்: விஜய், கதை-திரைக்கதை: ஏ.மஹாதேவ்& விஜய், இணைத் தயாரிப்பு : பிரபா பிரேம்குமார் ஆர்டிஸ்ட்: மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா, இசை: ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டிங்: ஆண்டனி, ஆர்ட் டைரக்டர்: சரவணன் வசந்த், பி.ஆர்.ஓ: யுவராஜ்

தனது பாய்ஃபிரண்டை நம்பி மியூசிக் காம்பெடிஷனுக்காக ஸ்காட்லார்ந்த் போகும் அதிதி [ ஜியா சங்கர்] அங்கு தனது அவன் வேறொருத்தியுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து மலையிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல, சித்தார்த்தால் [ மதும்கேஷ்] காப்பாற்றப்படுகிறார். இந்த இருவருக்கும் அடைக்கலம் தருகிறார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தும் பால்மாணிக்கம் [ எம்.எஸ்.பாஸ்கர்] மலையிலிருந்து குதித்ததால் ஜியா சங்கருக்கு பழசெல்லாம் மறந்துவிடுகிறது. தினமும் இரவு தூங்கி காலையில் கண் விழித்தால் எதிரில் இருக்கும் காப்பாற்றிய  மதும்கேஷையே யார்னு கேட்கிறார்.  ஜியா சங்கரை மதும்கேஷ் காப்பாற்றியது ஏன்? எம்.எஸ்.பாஸ்கர் அடைக்கலம் கொடுத்தது எப்படி?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

love-reset-repeatஇதன் உருக்கமான க்ளைமாக்ஸ் தான் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.

இயக்குனர் ஏ.எல். விஜய்யிடமிருந்து இப்படி ஒரு குட் லவ் ஃபீலிங் படமா?ன்னு ஆச்சர்யமா இருக்கு. அந்தளவுக்கு படத்தின் கதையையும் திரைக்கதையையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் எழுதி இரண்டேகால் மணி நேரமும் ரசிகர்களை [ வயசு வித்தியாசம் இல்லாமல்] தூய்மையான காதல் உணர்வுகளில் கட்டிப் போட்டு விஜய்க்கு உதவியிருக்கிறார் கதாசிரியர்  ஏ.மஹாதேவ்.

முதல்வர் பிறந்தநாள்

இளசுகளின் மனசும் உலகமும் இருந்தாலும் படத்தின் எந்த ஒரு சீனிலும் ஆபாசமோ, விரசமோ இல்லாமல் பதிவு செய்ததற்காகவே டைரக்டர் விஜய்க்கு நன்றி சொல்லலாம். இதற்கு பெரிய உதாரணம்… படத்தின் முதல் காட்சியிலேயே ஹீரோயின் ஜியா சங்கர் புடவை, கழுத்து நிறைய  நகைகளுடன் வருவது. அதே போல் அவருக்கான மாடர்ன் டிரஸ்ஸிலும் துளியளவு கூட கவர்ச்சி இல்லை. வெல்டன் விஜய்.

மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன் ஆகிய மூவருமே அறிமுகங்கள் தான். ஆனால் அப்படித் தெரியவில்லை.  தனது அப்பா ஜெயப்பிரகாஷிடம் ஸ்காட்லாந்திலிருந்து போனில் பேசும் முதல் சீனிலிருந்து க்ளைமாக்ஸில் மதும்கேஷைப் பார்த்து உருகுவது வரை ஜியா புள்ள நடிப்புக்கு “ஜே” போடலாம்.

ஊட்டியில் மியூசிக் டீச்சராக இருக்கும் விஜி சந்திரசேகரின் மகனான மதும்கேஷ், 10 வயதிலிருந்தே ஜியா சங்கரைக் காதலிப்பதாக எம்.எஸ்.பாஸ்கரிடம் சொல்லும் ஃப்ளாஷ்பேக் செம டச்சிங்கான ஏரியா. ஏக்கத்துடன் ஜியாவைப் பின் தொடர்வது அழகோ அழகு. சிறுவயது மதும்கேஷாக  வரும் அந்த சிறுவன் கரெக்டான செலக்‌ஷன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

love-reset-repeatஅர்ஜுன் அசோகனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்திருந்தாலும் ஸ்காட்லாந்தில் அடியாள் படையுடன் ஜியாவைக் கடத்தி வைக்கும் இருபது நிமிஷ சீன் ரொம்பவே இழுவை. அதே சமயம் மதும்கேஷ் காதல் ஜெயிக்க வேண்டும் என பார்வையாளன் மனசு நினைப்பதே அர்ஜுன் அசோகன் கேரக்டருக்கு வெற்றி தான்.

டூபாக்கூர் டாக்டராக எம்.எஸ்.பாஸ்கர். இவரின் நடிப்பு மிகவும் சிறப்பு. ஜியாவின் அப்பாவாக ஜெயப்பிரகாஷுக்கு நான்கு சீன்கள் தான்.

ஸ்காட்லாந்தின் இயற்கை அழகை தனது கேமராவில் அள்ளிவந்து கண்களுக்கு குளுமை விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா.

படத்தின் நிஜ ஹீரோன்னா அது மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயராஜ் தான். மியூசிக் காம்பெடிஷன் தான் பேஸிக் கண்டெண்ட் என்பதால் மனுஷன் பாடல்களில் பட்டையைக் கிளப்பிட்டார். அதிலும் க்ளைமாக்ஸில் ஜியா பாடும் பாடல் டாப்கிளாஸ் ரகம். அதே போல் பின்னணி இசையில் அசாத்திய உழைப்பைக் கொட்டி அசத்திவிட்டார். ஜியாவின் முதல் சீனில் லேசாக ஒலிக்கும் வீணை இசை, சென்னையில் மதும்கேஷ், ஜியா சங்கரை ஃபாலோ பண்ணிப் போகும் இரண்டு நிமிட சீன். இதெல்லாம் சாம்பிள் தான். படம் முழுக்க ஹாரிஸின் குட் ஃபீலிங் டச் தான்.

ரிப்பீட்டாக பார்க்கலாம் இந்த ‘காதல் ரீசெட் ரீப்பீட்’டை.

அங்குசம் பார்வையில் ‘காதல் ரிப்பீட் ரீசெட்’ 55/100— 

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.