அங்குசம் பார்வையில் ‘மார்கன்’     

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு “ ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ ஃபாத்திமா விஜய் ஆண்டனி. டைரக்‌ஷன்& எடிட்டிங்: லியோ ஜான்பால். ஆர்ட்டிஸ்ட் : விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், வினோத் சாகர், ‘ரீல்ஸ் ஃபேமஸ்’ அர்ச்சனா, கனிமொழி, சமுத்திரக்கனி, நிஹரிகா, கதிர், ராஜாராம். ஒளிப்பதிவு : எஸ்.யுவா, இசை : விஜய் ஆண்டனி, ஆர்ட் டைரக்டர் : ஏ.ராஜா, திரைக்கதை ; விஷ்ணு & லியோ ஜான்பால். பி.ஆர்.ஓ.: ரேகா.

சென்னையில் ஒரு இரவு நேரம். தனது பிறந்தநாள் பார்ட்டியைக் கொண்டாடிவிட்டு, காதலனுடன் டூவிலரில் தனது வீட்டருகே வந்ததும் இறங்கி, தனியாகச் செல்கிறாள் ஒரு இளம் பெண்.  காதலன் சென்ற சில நிமிடங்களிலேயே சைக்கோ  ஒருவனால் விஷ ஊசி போட்டுக் கொல்லப்படுகிறாள். உடலின் ஒருபாகம் உடனே  கருப்பு நிறமாக மாறி துடிதுடித்துச் சாகிறாள் அப்பெண். இந்த செய்தியை சேனல்களில் பார்த்து மும்பையிலிருந்து கிளம்பி வருகிறார் போலீஸ் அதிகாரியான துருவ் [ விஜய் ஆண்டனி}. இவரும் அதே போன்ற விஷ ஊசியால் பாதிக்கப்பட்டு உடலின் இடது பாகம் முழுவதும் கருப்பு நிறமாக காட்சியளிப்பவர்.

Kauvery Cancer Institute App

’மார்கன்’சென்னைக்கு வந்து அதிவேகத்தில் விசாரணை செய்து, சிசிடிவி ஃபுட்டேஜ்களைப் பார்த்து அக்யூஸ்டை தூக்கிவந்து விசாரிக்கிறார். ஆனால் அவன் அக்யூஸ்ட் இல்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் நீச்சல் வீரனான [ அஜய் தீஷன்] அவனின் உதவியுடன் குற்றவாளியை நெருங்குகிறார்.

யார் அந்த குற்றவாளி? என்பதை கொஞ்சம் சஸ்பென்ஸ், நிறைய த்ரில்லருடன் கலந்து வருபவன் தான் இந்த ‘மார்கன்’.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

படத்தின் ஆரம்பத்திலேயே அஜய் தீஷனைப் பிடித்து விசாரிக்கும் போது காட்டும் வேகம், அவன் அக்யூஸ்டா? இல்லையா? என்பதை மாறி மாறி காட்டியிருக்கும் ஸ்கிரிப்ட் ஸ்டைல் இதெல்லாம் ஓகே தான். அட கருப்பு ஊசி கண்டெண்ட் கூட டிஃபெரெண்ட் தான். ஆனா ஒரே ஒருத்தனைப் பிடிச்சு இடைவேளை வரை விசாரிச்சு, அதுக்குப் பிறகும் முக்கால் மணி நேரம் விஜய் ஆண்டணி விசாரிக்கிறதெல்லாம் ரொம்பவே சலிப்பாப்போச்சு டைரக்டரே. அது சரி டைரக்டரே, இந்தக் கதையில எதுக்கு தேவையில்லாம ஒரு மசூதியையும் என்கவுண்டரில் தப்பித்த சாதிக் கேரக்டரையும் போலீஸ் ஸ்டேஷனில் வல்லபாய் பட்டேல் போட்டோவையும் காமிச்சீக? சேட்டை தானே…லியோ ஜான்பால், நீங்க ஒரு மார்க்கமான ஆளு தான் போல.

’மார்கன்’போலீஸ் கெத்துடன் விஜய் ஆண்டனியின் ஸ்டைலிஷ் நடை, பாவனை எல்லாம் ஓகே. அதே போல் ரீரிகார்ட்டிங்கிலும் விஜய் ஆண்டனியின் பங்கு டபுள் ஓகே. பாவம் ஹீரோயின் பிரிகிடாவுக்குத்தான் “எஸ் சார்…ஓ.கே.சார்…ஆமா சார், கரெக்ட் சார்” என போலீஸ் யூனிபார்மில் சல்யூட் அடிக்கும் வேலை மட்டும் தான். “இவன் தான் இந்தக் கேஸை விசாரிக்க சரியான ஆளு”– கமிஷனர் சமுத்திரக்கனிக்கு அம்புட்டுத் தான் வேலை.

நீச்சல் வீரனாக அஜய் தீஷனின் சில அசாத்திய குணாதிசயங்கள், ஆந்தை வட்டமிடுவது என வித்தியாசமான ரூட்டைப் பிடித்திருக்கும் லியோ ஜான்பால், படம் மொத்தமாகப் பார்த்தால் ரூட்டிலிருந்து வழி தவறிவிட்டார்.

 

—   மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.