அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி கோடிக்கணக்கில் மோசடி மதனின் பலே டெக்னிக்

-மதுரையான்

0

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு குரூப் எப்போது தங்களது திருவிளையாடல்களை நடத்திக் கொண்டே இருக்கும்.

அப்பேர்ப்பட்ட ’திருவிளையாடல்’ பார்ட்டிகள் பதவியில் இருக்கும் அமைச்சர்களையோ, ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்களையோ மிகச் சுலபமாக நெருங்கிவிடுவார்கள்.  அவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு அடையாளமாக ஒரு லெட்டர் பேட் கட்சியோ அல்லது ஜாதிய அமைப்பையோ வைத்துக் கொண்டு அதன் தலைவராக, நிறுவனராக

தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு செயல்படுவார்கள். அத்தகையவர்களின் டுபாக்கூர் தனங்கள் எம்.எல்.ஏ.. எம்.பி.க் களின் அட்ராசிட்டியையே மிஞ்சும் ரகம்.

கடந்த ஜனவரி 17 எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று அமைச்சர்களுடனும் ஆளும்கட்சி வி.ஐ.பி.க்களுடன் நெருக்க மாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் எம்.எம்.ஆர்.மதன்.  ‘தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம்’ என்ற பெயரில் லெட்டர் பேட் அமைப்பை நடத்தும் மதன், அந்த இயக்கத்திற்கு மா.செக்கள், மகளிரணி நிர்வாகிகள் போஸ்டிங் போடுவதாகச் சொல்லி கலெக்ஷன் மேளா நடத்தினார். இந்த கலெக்ஷனுக்கு ஒரு கனெக்ஷன் வேணுமே என்ற ப்ளானுடன் அனைத்து அரசியல் கட்சி ஆபீசுகளுக்கும் சென்று அந்தக் கட்சிகளின் தலைவர்களுடன் போட்டோ எடுத்து அதை தனது ஃபேஸ்புக்கில் போடுவார். ஹரி நாடார், ராக்கெட் ராஜா போன்றவர்களுடன் கூட பவ்யமாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். இதையெல்லாம் தனது நட்பு வட்டத்தின் வாட்ஸ்-அப் குரூப்புகளில் போட்டு செமத்தியாக கல்லா கட்டினார்.

“துபாய்ல டிவெண்டி பெட்ரோல் கிணறு இருக்கு“ என்ற ரேஞ்சுக்கு அள்ளிவிடும் மதனை கடந்த 2021 அக்டோபர் மாதம் அள்ளிக் கொண்டு போனது தமிழக போலீஸ். மெடிக்கல் காலேஜில் சீட் வாங்கித் தருவதாக செங்கல்பட்டைச் சேர்ந்த ஒருவரிடம்

ரூ.3 கோடி வாங்கி ஏமாற்றிய குற்றச்சாட்டில் இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த மதன் சிக்கியதாக செய்தி வெளியானது.

இப்படியான டுபாக்கூர்தனங்களை செய்து சிக்கிய மதன் தான், கடந்த 2022 ஜன.17 எம்.ஜி.ஆர். பிறந்த நாளன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி, தி.மு.க.வர்த்தக அணி மாநிலச் செயலாளர் காசி முத்து மாணிக் கம், எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோருடன் ‘ஒயிட்& ஒயிட்’ சகிதம் முன்வரிசையில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.