மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் .

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மீனாட்சியம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் …..

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 8ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர்திறக்கப்படவுள்ளது பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் ….

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் விழாவாக நடைபெறவுள்ளது. மே 6 ல் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 08ந் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், மே 9ல் தேதி மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

சித்திரை திருவிழா கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா மே 8ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்வாக  சித்ரா பௌர்ணமியான மே12 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்நிலையில் மதுரை சித்திரை பெருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு. கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே -8ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைகையாற்று பகுதி, கோரிப்பாளையம், செல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா என கூறினார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலத்தில் அருகே மேம்பால பணிகள் நடைபெறுவதால் விஐபி வாகனங்கள் நிறுத்தவதில் குறைந்த அளவிற்கே அனுமதி மாநகர காவல்துறை தகவல் கூறினர்.

சித்திரை திருவிழா மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வைகையாற்று பகுதியில் ஆகாய தாமரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள தரைவழியில் மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மழை பெய்தால் மழைநீர் தேங்கும் சாலைகள் பழுதடைந்து காணப்படுவதாலும் தெரு விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் வைத்தார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுரை மாநகர பகுதிகளில் சித்திரை திருவிழாவின் போது தொலை தொடர்பு மற்றும் கேபிள் டிவிக்களுக்கான இணைப்பு கேபிள்களை உயரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில் 10 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.