என்று புரியும் இந்திய மருத்துவர்களின் அருமை! – Dr. கு. அரவிந்தன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வணக்கம் நான் உங்கள் மரு.கு.அரவிந்தன்.  #My_GH_Diaries யில் உங்களுடன் மீண்டும் இணைகிறேன்.. கடந்த சனிக்கிழமை அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் 24 மணி நேர பணியில் இருந்தேன், அப்போது நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி இந்த பதிவை மூன்று காட்சிகளாக எழுதுகிறேன் 👍🏻

காட்சி 1 : எனது நெருங்கிய நண்பன் அமெரிக்காவில் வசிக்கிறான், அவன் குழந்தைக்கு 4 நாட்களாக கடுமையான காய்ச்சல், ஒரு குழந்தை நல மருத்துவரை பார்த்திட appointment க்கு முயன்ற பொழுது அவனுக்கு இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே மருத்துவரை பார்க்க இயலும் என்றும் அதுவரை நீங்கள் காய்ச்சலுக்கான மருந்தை தாருங்கள் என்று கூறி, தொலை பேசியில் consultation செய்ததற்கு பீஸ் கட்ட சொல்லி வைத்து விட்டார்கள்.. அவன் நடந்ததைக் கூறி தொலைபேசியில் என்னிடமிருந்து ஆலோசனை பெற்று.. இங்கிருந்து எடுத்துச் சென்ற மருந்தை அங்கு கொடுத்து சமாளித்தான் 👍🏻

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந்திய மருத்துவமனைகாட்சி 2: எனது பேஷன்ட் ஒருவர், பிறந்ததிலிருந்து அக்குழந்தையை நான் தான் பார்க்கிறேன்.. நேற்று கிளினிக்கிற்கு குழந்தையுடன் அம்மா வந்திருந்தார்.. நான் குழந்தைக்கு என்னவென்று கேட்டேன், அதற்கு அம்மா குழந்தைக்கு ஒன்றும் இல்லை சார், நாங்கள் UK செல்கிறோம் இனி அங்கு தான் இருப்போம்.. குழந்தைக்கு அடிப்படைத் தேவையான மருந்துகளை எழுதி தாருங்கள் என்று கேட்டார்.. நான் உடனே உங்களுக்கு இன்சூரன்ஸ் இருக்கு தானே அங்கே வைத்தியம் பார்க்கலாம் தானே ஏன் இங்கிருந்து வாங்கி செல்கிறீர்கள் என கேட்டேன்.. அதற்கு அவர் காலை காய்ச்சல் என்றால் மாலை கூட என்னால் குழந்தையை ஒரு குழந்தை நல மருத்துவரிடம் காட்டிட முடியாது, அதேபோல் இன்சூரன்ஸ் இருந்தாலும்  அங்கு கட்டணங்கள் அதிகம்.. ஒரு சாதாரண காய்ச்சலுக்கு என் குழந்தையை காட்டி மருந்து கொடுக்க எனக்கு குறைந்தது 4 -5 நாட்கள் ஆகும்.. ஆகவே இங்கிருந்து எடுத்து செல்கிறேன் என்றார் 👍🏻

காட்சி 3:  கடந்த சனிக்கிழமை நான் எனது GH யில் 24 மணி நேர பணியில் இருந்தேன்.. மாலை சுமார் 6 மணி அளவில் ஒரு பெண் 2 குழந்தைகளை OP யாக அழைத்து வந்தார்கள் ( குறிப்பு: OP நேரம் காலை 730 முதல் மதியம் 12 வரை தான்) பாவம் குழந்தைகள் தானே என்று OP நேரம் தவிரவும் OP யாக எவர் வந்தாலும் நாங்கள் பார்த்து அனுப்புகிறோம் 👍🏻 ஆனால் எங்களால் OP யை உடனே வந்தவுடன் பார்த்து அனுப்பிட இயலாது, எங்களுக்கு உள் நோயாளிகளுக்கான பணி மற்றும் Emergency பேஷண்ட்களை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்..

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

Dr. கு. அரவிந்தன்
Dr. கு. அரவிந்தன்

இருந்தாலும் 10 – 15 நிமிடங்கள் உட்கார வைத்து நடுவில் OP பார்த்து அனுப்பி விடுவோம்..  அந்த அம்மாவிற்கு 5 நிமிடம் கூட பொறுக்க இயலவில்லை, உள்ளே வந்து வாய்க்கு வந்தபடி அனைவரையும் ஒருமையில் ஏசியது.. உன் பெயரை சொல்லுடா அது இதனு சத்தம் 😄 நான் சிரித்தவாரே அந்த அம்மாவிடம் ஒன்றே ஒன்று சொன்னேன்.. அம்மா நான் உங்களுக்கு டிக்கெட் எடுத்து தரேன்..  அமெரிக்காவுக்கு போய் குழந்தைக்கு சுரம் என்று ஒரு மருத்துவரிடம் பார்த்துவிட்டு வாருங்கள் என்றேன்.. இதுபோன்ற நிகழ்வு எங்கள் GHயில் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதாவது இங்கு உள்ள பொது மக்களுக்கு, இந்திய மருத்துவர்களாகிய எங்களுடைய அருமையும் புரியவில்லை, இந்திய மருத்துவ கட்டமைப்பு.. குறிப்பாக தமிழக அரசு மருத்துவ மனைகளின் கட்டமைப்பை பற்றியும், அதன் அருமைய பற்றியும் புரியவில்லை.  எங்களைக் குறை கூறும் நீங்கள் ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று அங்கே மருத்துவம் பார்த்துவிட்டு இங்கே வந்து எங்களை கை நீட்டி பேசுங்கள்  நமது தமிழகத்தில் ஒருவர் வெறும் அரை மணி நேரத்திலேயே ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் super speciality டாக்டரை பார்க்க முடியும்.. UK வில், US யில் தவம் இருந்தால் கூட அது உங்களால் இயலாது .

 

… Dr. கு. அரவிந்தன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.