இறுதி சடங்கிற்கு உதவிய மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக !
திருச்சி ரயில் நிலையத்தில் 9.4.25 தேதி அன்று மாலை 3 மணி அளவில் மணிகண்டன் என்கிற சகோதரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவர் சொந்த ஊர் ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த சகோதரர். திருச்சி கிழக்கு மாவட்டம் தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஆர் ரம்ஜான் அலி அவர்களிடம் விவரங்களை கூறி பிரதேத்தை வாங்கி குடும்ப உறவுகள் முன்னிலையில் , அவர்களின் மத சடங்கு படி சுடுகாட்டில் எரியூட்டுமாறு உதவி கோரினார்.
திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக, மமக மாவட்ட தலைவர் M.A.முகமது ராஜா அவர்களின் பரிந்துரையில் ரம்ஜான் அலி தலைமையில் பூக்கொல்லை மு.சையது முஸ்தபா விளையாட்டு அணி இப்ராஹிம் ஆகியோர் ரயில்வே காவல் நிலையத்திற்கு சென்று அங்கே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, அதன் பின்பு திருச்சி அரசு மருத்துவமனையில் சென்று பிரேத பரிசோதனை செய்த பிறகு, திருச்சி ஓயமாரி சுடுகாட்டில் குடும்ப உறவுகளை முன்னிலையில், அவர்களின் மத சடங்கு படி பிரதேதத்தை எரியூட்டப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மணிகண்டன் இறுதி சடங்கிற்கு உதவிய திருச்சி கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு இறந்தவரின் குடும்ப உறவுகள் நன்றிகள் தெரிவித்தார்கள்.