அமைச்சர் துரைமுருகனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் துரைமுருகனை கண்டித்து அவருடைய உரு படத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் மாற்றுத் திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக நொண்டி, நொடம், கூன், குருடுகளை அழைத்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி பிஜேபியுடன் கூட்டணி வைக்க செல்கிறார் என்று பேசியுள்ளார்.

அந்த கூட்டத்திற்கும் அவர் மாற்றுத்திறனாளிகளை உதாரணம் சொல்வதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் துரைமுருகன் அவர்களின் பதவியை பறிக்க கோரியும், அவர் மாற்றுத்திறனாளிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் 9.4.2025 காலை 11 மணியளவில் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பின் தலைவர் பழ.ராஜ்குமார் தலைமையில் தேசிய மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் திரு நெடுவை சரவணன் அவர்களது முன்னிலையில் செல்லபாரி, பாண்டியன், சேகர், மோஹன், கண்ணகி மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் துரைமுருகனின் உருவ படத்தை எரித்தும் கண்டனத்தை தொிவித்தனா்.
— தஞ்சை நடராஜன்.