அமைச்சர் ஆய்வில் மேயர் ஆப்சென்ட் ! காரணம் இதுதானா?
மதுரை மத்திய தொகுதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு தொகுதிக்கான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி இல்லாமல், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மட்டும் உடன் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மாநகராட்சி வரிமுறைகேடு விவகாரத்தில் அமைச்சரின் ஆதரவாளரான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமைச்சர் நிகழ்ச்சியில் மதுரை மேயர் இல்லாமலே நடைபெறுவது கட்சியினர் மற்றும் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு மத்திய தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்ட நிலையில் அவருடன் மேயர் இந்திராணி பங்கேற்றார். ஆனால், தற்போது மத்திய தொகுதியின் அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களை சந்திக்கும் போது மேயர் இந்திராணியை தவிர்த்து ஆணையாளர் மட்டும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்