ஃபாரின் சரக்கை பதுக்கி விற்ற ஆசாமியை கைது செய்த மதுரை போலீசார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரை தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட முனிச்சாலை பகுதியில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் விளக்குத்தூண் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் அருண்குமார் முன்னிலையில் சார்பு ஆய்வாளர் சுபத்ரா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது முனிச்சாலை ரோடு பகுதியில் சந்தேகப்படும்படி கைப்பையுடன் நின்ற நவநீத கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

மதுரை போலீசார்
மதுரை போலீசார்

Kauvery Cancer Institute App

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

அப்போது, வெளிநாட்டு மதுபானங்களை மொத்தமாக வாங்கி சில்லறையில் விற்று வந்தவர் என்பது தெரிந்தது. மேலும், அவரது வீட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 72 வெளிநாட்டு மது பாட்டில்களை கைப்பற்றினார்.

இதன் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் என போலீசார் கூறுகின்றனர். இந்த வெளிநாட்டுமது பாட்டில்கள் இவரிடம் எப்படி வந்தது? இவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்து உள்ளார்? என விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார், காவல் உதவி ஆணையர் சூரக்குமார்.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

—  ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.