த.வெக.வில் இணையும் முக்கிய புள்ளி? என்ன பொறுப்பு கொடுக்கப் போகிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி   அருண்ராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகிறார். தவெகவின் கொள்கை பரப்பு  பொதுச் செயலாளர் பதவி, அருண் ராஜிக்கு வழங்கப்பட கூடும் என்கின்றனர் தவெக வட்டாரங்கள்.

தமிழக வெற்றி கழகத்தில் திமுக, அதிமுகவில் இருந்து முக்கிய ‘தலைகள் ‘ இணைய போவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யை இன்று ஜூன் 10-ல் நேரில் சந்தித்து விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண் ராஜ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவெகவி-ல் இணைய உள்ளனர்.

Sri Kumaran Mini HAll Trichy

IRS அதிகாரி அருண் ராஜ்
IRS அதிகாரி அருண் ராஜ்

தவெகவில் இணையும் அருண் ராஜிக்கு என்ன பதவியை விஜய் வழங்குவார்? என்பது குறித்து கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடந்து வருகின்றன. அருண் ராஜிக்கு தவெக பொதுச் செயலாளர், இணை செயலாளர், அல்லது துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது. ஆதவ் அர்ஜினா உள்ளிட்டோர் அருண் ராஜ்க்கு உடனே முக்கிய பதவி வழங்கக்கூடாது என  எதிர்ப்பையும் தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது, கொள்கை பரப்பு பொதுச்  செயலாளர்  என்ற பதவி அருண் ராஜிக்கு வழங்கப்படும் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதுபோல, தவெக- இணையும் மேலும் சில அரசியல் பிரமுகர்கள் விவரங்களும் வெளியாகி வருகின்றன.

Flats in Trichy for Sale

திமுகவை சேர்ந்த  ஸ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வன் (1996-2001) அண்மைக் காலமாக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்யுடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்து வருகிறார். அவர் இன்று திமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைகிறார்.

முன்னாள் எம். எல். ஏ ராஜலட்சுமி
முன்னாள் எம். எல். ஏ ராஜலட்சுமி

அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு போன மயிலாப்பூர் முன்னாள் எம். எல். ஏ ராஜலட்சுமியும்(2011-2016) இன்றுதவெகவில் இணைகிறார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்தபோது, அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் தான் இந்த ராஜலட்சுமி. தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதால் பாஜகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைகிறார்.

அதிமுகவை சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் ஸ்ரீதரன் (1991-1996), ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜே பி ஆர்  அறக்கட்டளையில் இருக்கக்கூடிய டாக்டர் மரிய வில்சன் ஆகியோரும், விஜய் முன்னிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.