”மல்லர்கம்பம்” விளையாட்டு வீரர் தேர்வுப்போட்டி மற்றும் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “SDAT  ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” மல்லர்கம்பம் விளையாட்டிற்கு திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள 12 வயது முதல் 21 வயதுவரை 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகள் என ஒரு மையத்திற்கு 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு மாதத்திற்கு 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கிடுவதோடு, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுச் சீருடைபோன்றவைகள் வழங்கப்படும்.

பயிற்றுநர் பணிக்கு ண்ணப்பிப்பதற்கான தகுதி:

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 50 வயதுக்குட்பட்ட சாம்பியன் விளையாட்டு வீரர் / வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

மல்லர்கம்பம் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25,000/- வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோகோர இயலாது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

இதற்குரிய விண்ணப்பத்தினை 11.04.2025 முதல் 17.04.2025 வரை அலுவலக வேலை நாட்களில் அண்ணா விளையாட்டரங்க அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.04.2025 மாலை 5.00மணிஆகும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இவ்விளையாட்டிற்கு வீரர் / வீராங்கனைகளுக்கான தேர்வுப் போட்டிகள் அண்ணா விளையாட்டரங்கில் 28.04.2025 அன்று காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

தேர்வுப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள்

  • 12 வயது முதல் 21 வயது வரை (1.4.2013-க்கு பிறகு அல்லது 1.4.2005க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்) உள்ளவர்கள் இத்தேர்வு போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர்.
  • தேர்வுப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். (ஆதார் அட்டை நகல் / பிறப்புச் சான்றிதழ்  Bonafide சான்றிதழ் attestation- னுடன்) சமர்ப்பித்தால் மட்டுமே தேர்வுப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
  • இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் 01.05.2025 முதல் பயிற்சி அளிக்கப்படும். இதில் பயிற்சி பெறுபவர்கள் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் வீரர் / வீராங்கனைகளாக உருவாக்கப்படவுள்ளனர். போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி, தொலைபேசி எண். 0431-2420685 /  7401703494 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.