சுய உதவிக்குழுவினரிடம் ரூ.5 கோடி மோசடி!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் ஒன்றியம் வேலங்குடி, மலம்பட்டி, திருக்கோளக்குடி, செவ் வூர், வலையம்பள்ளம், திருமயம் ஒன்றியம் சங் கம்பட்டி உள்ளிட்ட பகு திகளில் சுயஉதவி மகளிர் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இதன் ஒருங்கிணைப்பாளராக திருப்பத்துார் புதுப்பட்டி இந்திரா நகரை சேர்ந்த வீரகுமார் மனைவி செல்வராணி செயல்பட்டு வந்தார். செல்வராணி, வீரகுமார் இருவரும் சுய உதவிக்குழு மகளிரை சந்தித்து சொந்த மாக தொழில் தொடங்கலாம்.
ரூ.5 கோடி மோசடி
மொத்தமாக இடம் வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி ஒவ்வொருவரின் பெயரிலும் தனியார் நிதி நிறுவனங்களில் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தனிநபர் கடன் பெற்றுள்ளனா்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்காக சுமார் 500 பேரிடம் கடன் பெற்ற இந்த தம்பதி இடம் வாங்காமல் அலைக்கழித்துள்ளனர். கடன் வாங்கும் பெண்ணிடம் ரூ. ஒரு லட்சத்துக்கு ரூ.5 ஆயிரமும், ரூ.50 ஆயிரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500ம் போனசும், சிக்கன் பிரியாணியும் வழங்கியுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படி ரூ.5 கோடி வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடன் வழங்கிய தனியார் நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும் கடனை திருப்பி செலுத்துமாறு கடன் பெற்ற சுயஉத விக்குழு மகளிருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதை பார்த்த அவா்கள், கடன் தொகையே கை்ககு வரவில்லை. அதற்குள் எப்படி நோட்டீஸ் வந்தது என்று அதிா்ச்சி அடைந்தனர். தாங்கள் ஏமாற்றப்பட்டதையறிந்து சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸெ்பெக்டா் தமிழ்செல்வி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே தலைமறைவாக உள்ள வீரகுமார், செல்வராணியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தேடுல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.