அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கஞ்சா போதையில் நடுரோட்டில் தூங்கி போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி. வைரல் வீடியோ

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தூங்கும் போது ஹாரன் அடிச்சது யார்டா,

கேட்டாரே ஒரு கேள்வி.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி.

 

திருச்சி மாவட்டம். மணப்பாறை மாரியம்மன் கோவில் வளைவு சாலை என்பது எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏனெனில், திருச்சி மற்றும் விராலிமலை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வருகிற அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மணப்பாறை நகர பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக உள்ள பிரதானமான சாலை என்பதால் எப்போதும் இந்த சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும்.

https://www.livyashree.com/

வீடியோ லிங்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்த நிலையில், இன்று மாலை கஞ்சா போதையில் வந்த பெரியவர் ஒருவர் அப்பகுதியில் அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தார். பின்னர், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரை அர்ச்சித்துக் கொண்டே தடுமாறி சென்று கஞ்சா போதையில் சாலையின் குறுக்கே பஞ்சு மெத்தையில் படுப்பது போல சாவகாசமாக படுத்துக் கொண்டார். போதையில் இருந்தவரை எழுப்ப வாகன ஓட்டிகள் பலர் முயன்றும் முயற்சி பலனளிக்கவில்லை.

இதனால், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பேருந்து நிலைய பகுதிக்கு செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் செய்வதறியாது திகைத்து நிற்க, யார் டா ஹாரன் அடிக்கிறது என கேட்டவாறு தடுமாறி எழுந்த கஞ்சா ஆசாமி சாலையின் குறுக்கு நெடுக்குமாக ஆபாசமாக பேசிய வாறு சுற்றி திரிந்து அப்பகுதி கடைக்காரர்களையும், போக்குவரத்து போலீசாரையும் கலங்கடித்தார்.

வீடியோ லிங்

இதனால், அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. மணப்பாறையில், திருட்டு மதுவுக்கு அடுத்தபடியாக சகஜமாக விற்கும் கஞ்சா விற்பனையை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.