கட்சியில் இருந்தா தூக்குறீங்க ! வைகோ மீது பாயும் வழக்கு !

0

கட்சியில் இருந்தா தூக்குறீங்க ! வைகோ மீது பாயும் வழக்கு !

மதிமுகவிலிருந்து 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் 

https://businesstrichy.com/the-royal-mahal/

மதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்குத் தலைமைக்கழகச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதற்குச் சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் எனச் சிவகங்கை – சே.செவந்தியப்பன், விருதுநகர் – என்.சண்முகசுந்தரம், திருவள்ளூர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகிய மாவட்டச் செயலாளர்களை வைகோ கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு மேற்கண்ட மூவரும் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாவட்டச் செயலாளர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்காமல், பொதுச்செயலாளர் வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “ஒழுங்கு நடவடிக்கை குழு எங்களை விசாரிக்கத் தார்மீக உரிமை இல்லை’ என்று தெரிவித்துள்ளனர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்நிலையில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு ‘மேற்கண்ட மாவட்டச் செயலாளர்கள் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்கவில்லை என்பதால் இவர் களைக் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கலாம்’ என்ற பரிந்துரையை வைகோவிடம் அளித்தது. பரிந்துரையை ஏற்றுக்கொண்ட வைகோ 3 மாவட்டச் செயலாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றனர்’ என்று அறிவிப்பைக் கடந்த மே 24ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இது குறித்து நீக்கப்பட்ட சிவகங்கை மா.செ. சே.செவந்தியப்பன் தொடர்பு கொண்டு, கேட்ட போது,
“கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பத்திரிக்கைகளில் தான் செய்தி வந்துள்ளது. எனக்குக் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை. நான் உள்ளிட்ட 3 மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்கள். எங்களை நீக்குவதற்குக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு எந்த அதிகாரமும் கிடையாது. எங்கள் நிலையை விளக்கிப் பொதுச்செயலாளருக்குக் கடிதம் எழுதினோம். அவர் எங்களுக்குப் பதில் அளிக்கவில்லை. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எங்களை நீக்கியதாக வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையைக் கேட்டுப் பெறுவோம். பின்னர் நீதிமன்றம் சென்று எங்களுக்குரிய நீதியைப் பெறுவோம்” என்றார்.

மதிமுக எதிர்ப்பு அணியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வழக்கறிஞர் அழகுசுந்தரத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், ‘கட்சியின் ஆயுள்கால உறுப்பினராக உள்ள 3 மாவட்டச் செயலாளர்களை வைகோ நீக்கியது கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது.
தற்போது நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை. ஜூன் 6ஆம் தேதி நீதிமன்றம் திறக்கப்படும்போது, மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் குறித்து வைகோ மீது வழக்கு தொடரப்படும்” என்று கூறியவர், “3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் குறித்துக் கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமியிடம் வைகோ கலந்து ஆலோசிக்கவில்லை.

அவைத்தலைவர் 3 மாவட்டச் செயலாளர்கள் நீக்கியது தவறு என்ற வகையில் கடிதம் எழுதி யுள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.
“எதிர்ப்பு தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர் களுடன் வைகோ நேரில் பேச்சுவார்த்தை நடத்தினாலே இப்பிரச்சனை தீர்வு பெறும். நீக்கும் நடவடிக்கை என்பது தேவையற்றது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மதிமுக முன்னணித் தலைவர்களில் ஒருவர்.

என்ன முடிவு எடுக்கப் போகிறார் வைகோ..? பேச்சுவார்த்தை நடத்துவாரா..? நீதிமன்றம் வரை செல்ல தயாராக இருக்கிறாரா..? என்பதை மதிமுக வட்டாரங்கள் எதிர்நோக்கியுள்ளன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.