திருச்சியில் ‘மாடி’ அரசியல்
திருச்சியில் ‘மாடி’ அரசியல்
எப்படியாவது மகனுக்கு மாநில அளவில் பொறுப்பு வாங்கிவிட வேண்டும் என்று பொறுப்பாக பல்வேறு வேலைகளை பார்த்து வருகிறாராம் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
தற்போது அவர் வகித்து வரும் மாவட்டச் செயலாளர் பொறுப்பை மகன் தான் பொறுப்பாக கவனித்து வருகிறாராம். அதிமுக நிர்வாகிகள் கட்சி ரீதியாக ஏதாவது வெல்லமண்டியாரிடம் பேசப் போனால், ‘மாடிக்குப் போங்க’ என்கிறாராம். மாடியில் மகன் ஜவஹர் ‘பொறுப்பு மா.செ.’வாக பொறுப்பாய் பணியாற்றி வருகிறாராம்.