தினபூமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் கோர விபத்தில் மரணம் !
வேலை இல்லை, ஆள்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாய் நொட்டை சொல்லாமல், தெரிந்தே கதவுகளை திறக்காமல்- நுழைவுவழிப்பாதையை அடைத்துக் கொள்ளாமல்; ஒரே ‘பீட்’ டுக்கு ஐந்து பேரை கூட நியமித்து பலரின் பசிக்கும், பாதுகாப்புக்கும், கனவுகளுக்கும், எண்ணத்துக்கும் ஏற்றார் போல்; தினபூமியின் பயணம் இருந்ததை நினைத்துப் பார்க்கிறேன்.
மொத்தத்தில் விமர்சனம்- வெறுப்புணர்வு இல்லாத பொதுப்பார்வையில் சொல்வதெனில் தினபூமி நிறுவனம் ஒரு கைகாட்டி விளக்கு. என் மூலமாக மட்டும் டபுள் டிஜிட்டில் ஆள்களை அங்கே வேலைக்கு சேர்த்து விட்டிருக்கிறேன். நான் அங்கு வேலை பார்த்தது இல்லை என்றாலும் ஆசிரியர் பொறுப்பில் இருந்த தோழர் புருசோத்தமன், தலைமை நிருபராக இருந்த நண்பன் கமலநாதன் (எ) கமல் (மூத்த பத்திரிகையாளரான சொ.க. (எ) சொ.கருணாநியின் மகன்) உள்ளிட்ட பலர் அன்றாடம் அளவளாவுதலில் இருந்தனர். கமலநாதன் இன்று இல்லை. இருந்திருந்தால் துடித்துப் போயிருப்பார்.
இது குறித்து தினபூமி நாளிதழில் முன்னாள் செய்தி ஆசிரியர் த.ராஜாராமன் ( எ ) பாரதராஜா யாதவ் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் தினபூமி நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர்,எங்கள் குரு, திரு திருநாவுக்கரசர் மறைவு செய்தியின் ஈரம் காய்வதற்கு முன்னரே அடுத்த பேரிடி தலையில் வந்திறங்கியது.
ஆம்.எங்கள் செய்தி ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு சார் அவர்களின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தி காரில் வந்துக் கொண்டிருந்த
எங்கள் தினபூமியின் உரிமையாளர் திரு.எஸ்.மணிமாறன் *சார் அவர்கள் கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் அகால மரணமடைந்தது கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது.
தினபூமி உரிமையாளர்,எங்களின் வழிகாட்டி திரு.எஸ்.மணிமாறன் அவர்கள் பிரச்சினைகளுக்கு அஞ்சாதவர் எல்லாவற்றிலும் நெஞ்சுரத்தோடு முடிவெடுக்க கூடியவர் ,தினபூமி இதழில் பணிபுரிபவர்களுக்கு பிரச்சினை என்றால் எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்.அனைத்து வகையிலும் சப்போர்ட் செய்யக்கூடிய நாளிதழின் உரிமையாளராவார்கள்.
ஒரே நேரத்தில் எங்கள் குரு தினபூமியின் செய்தி ஆசிரியர் திரு.திருநாவுக்கரசு, இதழின் உரிமையாளர் எங்கள் வழிகாட்டி திரு.மணிமாறன் ஆகிய இருவரையும் இழந்து முன்னாள் இன்னால் இதழியலாளர்கள் மற்றும்,ஊழியர்களை
கடும் வேதனையடைய செய்துள்ளது
அன்னாரது ஆத்மா இறைவனின் திருப்பாதங்களில் இறைப்பாற பிரார்த்திப்ப்போம்
த.ராஜாராமன் ( எ ) பாரதராஜா யாதவ்
முன்னாள் செய்தி ஆசிரியர் தினபூமி நாளிதழ்- திருச்சி
தினபூமி செய்தி ஆசிரியர் திருநாவுக்கரசு, நிறுவனர் மணிமாறன் ஆகியோர் மறைவுக்குகனத்த இதய அஞ்சலி