அங்குசம் பார்வையில் ‘மார்க்’
தயாரிப்பு : ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், டைரக்ஷன் : விஜய் கார்த்திகேயா, ஆர்ட்டிஸ்ட் : கிச்சா சுதீபா [ கிச்சாசுதீப்னு தான் இருந்துச்சு. எவனோ நியூமலராலஜிக்காரன் சொல்லியிருப்பான் போல. அதனால் டைட்டில் கார்டில் கிச்சா சுதீபான்னு போடுகிறார்கள்], தீப்ஷிகா, ரோஷிணி, ஷான் டைம் சாக்கோ, நவீன் சந்திரா, விக்ராந்த், குருசோசமசுந்தரம், யோகிபாபு, அருள்தாஸ், ஜி.எம்.குமார், சுப்பு பஞ்சு. ஒளிப்பதிவு : சேகர் சந்திரா, இசை : அஜ்னீஸ் லோக்நாத், எடிட்டிங் : எஸ்.ஆர்.கணேஷ் பாபு, பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.
ஒரு ஆண்டுக்கு முன்பு வெளியாகி தமிழ்நாட்டிலும் ஹிட்டடித்த கிச்சா சுதீபாவின் ‘மேக்ஸ்’ படத்தை டைரக்ட் பண்ணிய நம்ம ஊரு விஜய் கார்த்திகேயா தான் இதிலும் கிச்சாவுக்கு போலீஸ் வேசம் போட்டிருக்கிறார். என்ன ஒண்ணு கிச்சா சஸ்பென்சனில் இருப்பதால் இதில் யூனிபார்ம் இல்லை.
மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் பேர்வழியான ஸ்டீபன் ராஜின் [ குருசோமசுந்தரம்] 2 ஆயிரம் கோடி ரூபாய் பவுடர் சரக்கை மடக்கி ஸ்டேஷனுக்கு கொண்டு வருகிறார் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ். இதனால் ஆத்திரமாகும் ஸ்டீபன் ராஜின் கும்பல் ஸ்டேஷனுக்குள் புகுந்து அதகளம் பண்ணி, போலீஸ் அனைவரின் சட்டையைக் கழட்டி முட்டி போட வைத்து வெறித்தனமாக ஆட்டம் போடுகிறது.
இந்த ரணகளமான நேரத்தில் தான் செம மாஸாக, கொஞ்சம் போதையுடன் ஸ்டேஷனிலிருந்து குபீரென எழுந்து ரவுடிக்கும்பலை பொளந்து கட்டுகிறார் சஸ்பென்சனில் இருக்கும் எஸ்.பி.அஜய் மார்க்கண்டேயன் என்ற மார்க்.
முதல்வர் பதவி வெறியில் பெற்ற தாயையே ஆஸ்பத்திரியில் மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டு, குளோஸ் பண்ணுகிறார் உள்துறை அமைச்சர் ஆதிகேசவன் [ ஷான் டைம் சாக்கோ]. இதை டாக்டர் ஒருவர் வீடியோ எடுக்க, அதை மோப்பம் பிடிக்கும் எதிர்க்கட்சித்தலைவர் மார்க்கிடம் விஷயத்தைச் சொல்கிறார்.
அதன் பின் நடக்கும் அதிரடி, சரவெடி, ஆட்டம் தான் இந்த ‘மார்க்’ . கிச்சாவின் இதற்கு முந்தைய படமான ‘மேக்ஸ்’-ல் போலீஸின் புத்திசாலித்தனமான ஆட்டத்தை டிபார்ட்மெண்டுக்குள் இருந்து கொண்டே மேலதிகாரிகளுக்கு தண்ணி காட்டுவார். க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடாகவும் பிரிலியண்டாகவும் ஸ்கிரிப்டை கொண்டு போயிருப்பார் டைரக்டர் விஜய் கார்த்திகேயா.
இதிலும் உள்துறை அமைச்சரின் கொலைவெறியாட்ட வீடியோவைக் கைப்பற்றப் போராடும் மார்க்கண்டேயனாக கிச்சாவை செம மாஸாக காட்டுவதற்கு மட்டும் ஸ்கிரிப்டில் கவனம் செலுத்தியிருந்தால் மட்டும் படம் க்ரிப்பாக இருந்திருக்கும். ஆனால் 18 குழந்தைகள் கடத்தல், தண்ணீருக்குள் மூழ்கி குழந்தைகளைக் காப்பாற்றும் கிச்சா, பார்த்தாலே செம டென்ஷனாகும் நவீன் சந்திராவின் கேணத்தனமான வில்லன் வேசம் இதெல்லாம் மார்க்கை சறுக்க வைத்துவிட்டது. நவீன் சந்திராவின் தம்பியாக விக்ராந்த், இவரின் நண்பனாக கிச்சாவிடம் சிக்கும் யோகிபாபு [ நான்கு சீன்கள் தான்], கிச்சாவுடன் பயணிக்கும் போலீஸ் பெண்மணிகளாக தீப்ஷிகா, ரோஷிணி, நவீன் சந்திராவின் அப்பாவாக ஜி.எம்.குமார், மாமாவாக சுப்பு பஞ்சு என பெரிய கூட்டமே இருக்கு. பிம்பிலிக்கி பிளாகி வில்லனாக குரு சோசமசுந்தரம்.
பெரும்பாலான இரவுக் காட்சிகளில் கேமராமேன் சேகர் சந்திராவின் உழைப்பு தெரிகிறது. காளி கோவில் டப்பாங்குத்து டான்ஸ் பாடலில் கலக்கியிருக்கார் மியூசிக் டைரக்டர் அஜ்னீஸ் லோக்நாத். அந்தப் பாடலில் கிச்சா சுதீபாவின் லைட் மூவ்மெண்ட் செம சூப்பர்.
படத்தில் ஒரு சீனில் யோகிபாபு, “நான் சாதரண நடிகனோட ரசிகன் இல்லடா… பாலய்யா ரசிகன்டா” என டயலாக் பேசுவார். இந்த ‘மார்க்’ பாலய்யா படத்துக்கும் மேல.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.