அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மாஸ்க்’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘தி ஷோ மஸ்ட் கோ ஆன்’& ‘பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ்’ எஸ்.பி.சொக்கலிங்கம் & ஆண்ட்ரியா. டைரக்டர்: விகர்ணன் அசோக். ஆர்டிஸ்ட்: கவின், ஆண்ட்ரியா ஜெரிமயா, ருஹானி ஷர்மா, சார்லி, பவன் கிருஷ்ணா, கல்லூரி வினோத், ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா சந்தோக், சுப்பிரமணிய சிவா ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், அருள்தாஸ், வெங்கட், மகாலட்சுமி. ஒளிப்பதிவு: ஆர்.டி.ராஜசேகர், இசை: ஜி.வி.பிரகாஷ், எடிட்டிங்: ஆர்.ராமர், ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன், விக்கி, நடனம்: அசார், விஜி, ஆர்ட் டைரக்டர்கள்: ஜாக்கி, அய்யப்பன், காஸ்ட்யூம்: பூர்த்தி பிரவீன் & விஜய் சங்கர் , பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே.அஹமது, பாரஸ் ரியாஸ்.

ஸ்பை & டிடெக்டிவ் என்ற பெயரில் பிக்‌ஷாட்டுகளை பிளாக் மெயில் பன்ணுகிறார் வேலு[ கவின் ], அனாதைப் பெண் குழந்தைகளை செலக்ட் பண்ணி, தொழிலதிபர்களிடம் பணம் வசூல் பண்ணி, ஹோம் என்ற பெயரில் அப்பெண்குழந்தைகளைப் படிக்க வைத்து, சிலரை செக்ஸ் ஒர்க்கராக்கி ’சப்ளை & சர்வீஸ்’  வேலை பார்க்கிறார்  பூமி[ ஆண்ட்ரியா ஜெரிமயா]. ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடுத்தர வர்க்கத்தின் 66 குடும்பங்களை சீட்டிங் பண்ணி, பல நூறு கோடிகளை சுருட்டுகிறார் அமைச்சர் மணிவண்ணன் [ பவன் கிருஷ்ணா].

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மாஸ்க்‘ஆண்ட்டி’ ஆண்ட்ரியாவின் துணையுடன் தேர்தல் நேரத்தில் 234 தொகுதிகளுக்கும் 440 கோடியை பட்டுவாடா செய்யும் வேலையை ஆரம்பிக்கிறார். ஆனால் ‘மாஸ்க்’ அணிந்த குரூப் ஒன்று அந்த 440 கோடியை ஆட்டையப் போடுகிறது. அந்தப் பணத்தை மீட்க ஸ்பை வேலுவின் உதவியை நாடுகிறார் ஆண்ட்ரியா. 440 கோடியை ஆட்டையப் போட்ட அந்த ‘மாஸ்க்’ குரூப்பின் பின்னணி என்ன? அந்தப் பணம் ஆண்ட்ரியாவுக்கு கிடைத்ததா? கவினுக்கு கிடைத்ததா? இதான் விறுவிறு…கொஞ்சம் சொத….சொத… க்ளைமாக்ஸுடன் முடியும் ‘மாஸ்க்’ படத்தின் கதை.

’ஏழைகளை ஏமாற்றி கொள்ளையடித்த பணம் மீண்டும் ஏழைகளிடமே வந்து சேரும்’ என்ற நீதியுடன்  வந்திருக்கும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் லேட்டஸ்டாக வந்து சேர்ந்திருக்கிறது இந்த ‘மாஸ்க்’. “நான் கெட்டவன் தான், ஆனா எச்ச இல்ல” இதான் கவின் கேரக்டரின் பேஸிக் லைன். இவருக்கு கல்யாணமாகி, ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்குப் போயிருக்கார் கவினின் மனைவி[ இவர் யார்னு காட்டாமலேயே கதையில் சொல்லியிருக்கார் டைரக்டர்] .

Admission Enquiry Form

அப்பா—அண்ணனுடன் சேர்ந்து கவின் நடத்தும் ‘ருசி விலாஸ்’ ஓட்டல் தான் கவினின்  கிரிமினல் பிளான் ஸ்பாட். இதுவரை லவ்வர் பாயாக வந்துக்கிட்டிருந்த கவின், இதில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து, அடுத்த ஸ்டெப்புக்கு போயிருக்கிறார். இவருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆன [ கதைலதாங்க] ஹீரோயின் ருஹானி ஷர்மாவுக்கும் ஜாலியான டூயட் வைத்து, ‘ரெட்டைவால் குருவி’ மோகனை இரண்டு பேருக்கும் கனெக்ட் பண்ணி, இடைவேளைக்கு முன்பாகவே புருஷனை வைத்து ருஹானியைப் போட்டுத்தள்ளிவிடுகிறார் டைரக்டர் விகர்ணன் அசோக். அதனால் படம் முழுக்க வில்லி ஆண்ட்ரியாவின் விபரீத விளையாட்டு தான். ”நான் பொண்ணுகளை சப்ளை பண்ணுவேன், ஆனா நீ மிருகம் மாதிரி அவளுகக்கிட்ட நடந்துக்கிட்டா விரலை வெட்டுவேன்” இதான் பூமித்தாயின் பாலிஸி. இவருக்கு ஜெயில் கைதி ஃப்ளாஷ்பேக் ஒன்றும் இருக்கு. அமைச்சர் பவன் கிருஷ்ணாவும் அவரது அமைச்சரவை சகாக்களும்  சல்லாப வீடியோவால் ஆண்ட்ரியாவிடம்  மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மாஸ்க்படத்தில் ஹீரோ கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா உட்பட எல்லோருமே ‘பேட் கேரக்டர்ஸ்’ தான். க்ளைமாக்ஸில் அதிரடியாக எண்ட்ரியாகி அதகளம் பண்ணும் சார்லியும் ஏமாந்தவர்களுக்காக கோர்ட்டில் வாதாடும் வக்கீல் ஆடுகளம் நரேனும் தான் ‘குட் கேரக்டர்ஸ்’.

பல சீன்களில் தனது சீனியாரிட்டி எக்ஸ்பீரியன்ஸைக் காட்டி அசத்தியிருக்கார் கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர். இரண்டு பாடல்கள் சூப்பர்ஹிட் ரகம் என்றாலும் முக்கால்வாசி சீன்களில் டயலாக்கை கேட்கவிடமால் டாமினேட் பண்ணுகிறது ஜி.வி.பிரகாஷின் பேக்ரவுண்ட் மியூசிக்.

”எல்லா கடவுளர்களைவிட உக்கிரமானது நடுத்தர வர்க்கத்தின் முகம். அவர்களின் கோபம் வெளியே பொங்கும் போது… பணமுதலைகள் பொசுங்கிருவான்” சார்லி பேசும் இந்த வசனத்துடன் நமது கலகக்காரர், நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘மாஸ்க்’ மூலம் சாட்டையைச் சுழற்றுகிறார் டைரக்டர் விகர்ணன் அசோக்.

‘மாஸ்க்’ நடுத்தர வர்க்கத்திற்கான நியாயம்.

—     ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.