நடிகர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு ? நிர்வாகி கூறிய பதில் !
தமிழ்நாட்டின் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்க கூடிய நடிகர் விஜய்யை தேர்தல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் ஹைதராபாத்தில் சந்தித்து பேசி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. இது குறித்து அங்குசம் இதழுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அகில இந்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கூறியது, நடிகர் விஜய்க்கும் பிரஷாந்த் கிஷோருக்கான நட்பு ஏற்கனவே இருந்த ஒன்றுதான், உதயநிதி மூலமாக பிரசாந்த் கிஷோர் இருக்கும் விஜய்க்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பிறகு சட்டமன்ற தேர்தலுக்கு திமுக விற்காக பணியாற்ற வந்ததால் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரஷாந்த் கிஷோர் நடிகர் விஜய்யும் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். பிரஷாந்த் கிஷோர் அந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெற்றியை பெற்றிருக்கிறீர்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கியிருக்கிறார்கள். கட்சியாக இல்லாவிட்டாலும் மாநிலம் முழுவதும் உங்களுடைய ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். அதேநேரம் தேர்தல் அரசியலில் களமிறங்கி இருக்கிறீர்கள். எப்படி அனைத்துமே உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிராக அரசியல் செய்ய தமிழ்நாட்டில் வலுவான தலைமை இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.இதைத்தொடர்ந்து உதயநிதியும் தீவிர அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் அரசியல் இயக்கமாக உருவாக்கினால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அறிவுரை வழங்கினாராம். இப்படி பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய்க்கு கூறியிருக்கிறார். அனைத்தையும் மெதுவாக கேட்டுக்கொண்ட விஜய் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பிரசாந்த் கிஷோரிடம் பதிலளித்துள்ளாராம்.
அதே சமயம் மற்றொரு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஹைதராபாத்தில் நடிகர் விஜய் பிரசாந்த் கிஷோரை சந்திக்க வில்லை என்று மறுத்து வருகிறார். இதையடுத்து நடிகர் விஜய்யிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டதற்கு இன்னும் சில மாதங்களில் நல்ல முடிவை விஜய் சொல்வார். விரைவில் விஜய் மக்கள் இயக்கம் தீவிர அரசியலை நோக்கி நகரும், ஆனால் நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்குவதற்கு தற்போது வாய்ப்பில்லை. அரசியல் கட்சியை கவனித்துக் கொள்ள முக்கிய பொறுப்பு புஸ்ஸி ஆனந்திற்கு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.