ஜெயக்குமாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு -சசிகலாவை எதிர்க்க எடப்பாடி வகுத்த வியூகம் !

0

எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் இருந்து சசிகலாவை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர் ஜெயக்குமார். இதனாலேயே ஜெயக்குமார் நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்பை அதிமுக தலைமை ஊக்குவித்தது.

இப்படி இருந்த நிலையில் ஜெயக்குமார் தற்போது சிறை சென்று வெளியே வந்து இருகிறார். சிறைக்கு சென்று வெளியே வந்தது முதலே அதிமுகவில் ஜெயக்குமாரின் மவுஸ் சற்று கூடுதலாகவே உயர்ந்திருக்கிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய தனியார் ஹோட்டலில் மூன்றாவது மாடியில் தங்கியிருக்கும் ஜெயக்குமாரை சந்திக்க தினமும் வரும் ரத்தத்தின் ரத்தங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட செல்லும்பொழுதும் வாகன பேரணியாக புறப்பட்டு செல்லும் ஜெயக்குமார் கரை விட்டு இறங்கியதுமே ரத்தத்தின் ரத்தங்கள் எழுப்பும் முழக்கம் காவல் நிலையம் முழுவதும் எதிரொலிக்கிறது.

4 bismi svs

மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விருந்து என்று திருச்சியில் உள்ள ஜெயக்குமாரை ரத்தத்தின் ரத்தங்கள் பிரம்மாண்டமாக கவனிக்க, உற்சாகத்தில் சிரித்த முகத்தோடு நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் ஜெயக்குமார்.

இந்த நேரத்தில் அதிமுகவில் சசிகலா பற்றிய பேச்சு அதிகரித்து வருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல இதனால் ஜெயக்குமார் போன்ற கடுமையான சசிகலா எதிர்ப்பாளர்களை கட்சியில் முக்கிய இடத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று சேலத்தில் உள்ள ரத்தத்தின் ரத்தங்களுக்கு சிந்தனை உதித்து இருக்கிறதாம். இதனால் எடப்பாடியார் ஜெயக்குமாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்திருக்கிறாராம். இதை தொடர்ந்து எந்த பொறுப்பு வழங்கலாம் என்று யோசிக்கும் பொழுது அதிமுகவின் அவைத்தலைவராக தற்போது தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக ஜெயக்குமாரை நியமித்தால் செயல்பாடு அதிகரிக்கும் என்று முடிவு எடுத்திருக்கிறாராம் எடப்பாடியார். இதனால் சில வாரங்களில் கட்சியில் நிர்வாகிகள் பொறுப்பில் சிறிய மாற்றம் இருக்கும் என்ற எம்ஜிஆர் மாளிகையில் இருந்து தகவல்கள் வருகிறது.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.