ஹரா மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் மைக் மோகன் !
மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.
‘ஹரா’ மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் ‘மைக்’ மோகன்!
தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் ‘மைக்’ மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் ஏப்ரல் 14 அன்று வெளியிட்ட பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்…. தயாரிப்பாளர் எஸ்.பி. மோகன் ராஜ், “பத்திரிகை நண்பர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள். இப்படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம், முதல் படம் ‘பவுடர்’. இந்த ‘ஹரா’முழுக்க முழுக்க கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது. மோகன் சாருக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு. படம் நன்றாக வந்துள்ளது. மோகன் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.
இயக்குநர் விஜய் ஶ்ரீ ஜி பேசியதாவது,”அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த மேடை ஏறி நிற்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. காரில் போகும் போது ஒரு ஆக்ஸிடெண்ட்மூன்று நாள் கழித்து தான் எனக்கு நினைவே வந்தது. மோகன் சார் குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்துவிட்டார். எல்லோருக்கும் குடும்பம் தான் முக்கியம். 16 இலட்சம் செலவானது. மோகன் சார், மோகன் ராஜ் சார் தான் பார்த்துக் கொண்டார்கள். மோகன் சார் மிகப்பெரிய ஆளுமை, ஆனால் ஒரு துளி கர்வம் கிடையாது .மோகன் சார் நடிப்பில் கலக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். அவருக்கு இந்த ‘ஹரா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்”.
நடிகர் மோகன் பேசியது. “என்னால் முடிந்த அளவு புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு தந்தால் பசியோடு வெறியோடு படம் செய்வார்கள் என்று தான் நினைத்துள்ளேன். என்னுடைய பாட்டுகள் பற்றி எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் அதற்கு காரணம் இசைஞானி தான். அவர் யாருக்கும் வஞ்சனை இல்லாமல் பாட்டு தந்துள்ளார். எல்லா நடிகர்களுக்கும் ஒரே மாதிரி பாடல் தந்துள்ளார். ஆனால் அந்தப் பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால் அதை ஆர் சுந்தர்ராஜன் மாதிரி இயக்குநர்கள் இயக்கியது தான் காரணம். அவர்கள் மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள். என்னை வைத்து இயக்கிய இயக்குநர்கள், இசையமைப்பாளர் எல்லோரும் தான் என் வெற்றிக்கு காரணம். நான் எப்போதும் மார்க்கெட்டைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்.
ஒரு படம் என்றால் அது எனக்குப் பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். நிகில் முருகன் தான் விஜய் ஶ்ரீயை கூட்டி வந்தார். எனக்கு திரைக்கதையில் சில தயக்கங்கள் இருந்தது. அதை மனமுவந்து மாற்றினார். 7 முறை மாற்றி தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். ஏன் ஹராவை ஒத்துக்கொண்டீர்கள் என எல்லோரும் கேட்டார்கள். விஜய் ஶ்ரீயிடம் ஃபெண்டாஸ்டிக்கான லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் இருக்கிறது, அந்த திறமை அவரை பெரிய அளவிற்கு கொண்டு செல்லும். விஜய் ஶ்ரீ அவருக்கு என்ன ஆனாலும், படத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டி ருப்பார். அவர் பிழைத்து வரக் காரணம் அவர் மனைவி, குழந்தைகள் புண்ணியம் தான். அவர் இன்னும் நிறைய நல்ல படங்கள் தருவார். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள், நன்றி”.
மதுரைமாறன்