செந்தில் பாலாஜி மீது கொங்கு சமூகத்தைச் சேர்ந்த அதிமுக – பாஜக பிரமுகர்களுக்கு அப்படி என்ன கோபம் ?
செந்தில் பாலாஜி மீது கொங்கு சமூகத்தைச் சேர்ந்த அதிமுக – பாஜக பிரமுகர்களுக்கு அப்படி என்ன கோபம் ?
அமைச்சர் உடல்நிலை பரிசோதனை குறித்த செய்திகள் ஒருபுறம் மிகுந்த கவலையையும் மறுபுறம் அடக்க முடியாத ஆத்திரத்தையும் தருகிறது.
அதிமுகவின் பத்தாண்டு ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் வேலுமணியும் செய்யாத அராஜகம் இல்லை. செய்யாத ஊழல் இல்லை. அப்படியிருக்கையில் மற்ற கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளை காட்டிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மீது மட்டும் ஏன் பாஜக இப்படியொரு அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளது?
அதுவரை வேலுமணியின் கோட்டை என கோயமுத்தூரில் தவ்லத்தாக உலா வந்த மற்ற கொங்கு சமூக அரசியல்வாதிகள் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து அவர்கள் உருவாக்கி வைத்து இருந்த மாய கோட்டை உடைத்து 2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய வெற்றி தடத்தை கோயமுத்தூரிலும் பதித்தார்.
வெறும் 10 நாளில் 10 தொகுதிகள் – 100 மாநகராட்சி வார்டுகள் – 50 நகராட்சி + பேரூராட்சி வார்டுகளில் மக்களின் குறைகளையும் தேவைகளையும் அறிய சூறாவளியாய் சுழன்றடித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒரு நாளைக்கு 20 முதல் 25 இடங்களில் பாயிண்ட். காலை 5 மணிக்கு தொடங்கும் பயணம் இரவு 11 மணிக்கு முடியும். அதன்பிறகுதான் சாப்பாடு உறக்கம் எல்லாமே…
தினமும் வாங்கும் மனுக்கள் தினமும் 15 முதல் 20 கட்ட பைகளில் தனி வாகனம் வைத்து கோவையில் இருந்து கரூர் கொண்டு வரப்படும். மனுக்களை துறை வாரியாக பிரிக்கப்பட்டு மீண்டும் மனுக்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் கொடுக்கப்படும். அவர்கள் அவற்றை மீது நடவடிக்கை எடுப்பார்கள். 10 நாட்கள் சுற்றுப் பயணம் நிறைவுற்ற அடுத்த சில நாட்களிலேயே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வ.உ.சிதம்பரனார் மைதானத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் 25,000 பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் உழைப்பு பிரமிக்க வைத்தது. அந்த 10 நாட்கள் சரியாக சாப்பிட கூட நேரம் இருக்காது. பொதுவா காலையில் சாப்பிட மாட்டார். தூக்கம் என்பது வெறும் 4 மணிநேரம்தான்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுக்களை குவிந்ததை பார்க்கும் போது தான் பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் கோவை மக்களின் தேவைகளை எந்த லட்சணத்தில் கவனத்திருப்பார்கள் என்பதே புரிந்தது.
ஆனால் அவரின் தற்போதைய நிலை என்ன?
கோவை களத்தில் செந்தில் பாலாஜி இருந்தால் அதிமுக வளராது. பாஜக வேரூன்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட நாசக்கார பாஜக – அதிமுக கூட்டம் அவரை திட்டம்போட்டு செந்தில் பாலாஜி அவர்களை கோவை மண்ணிலிருந்து அப்புறப்படுத்த டெல்லி வரை சென்று EDயை ஏவிவிட்டது. சுமார் 2 மாதம் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேடியும் அவர்கள் எதிர்பார்த்து வந்த எதுவும் சிக்காததால் எப்படியாவது டெல்லிக்கு தூக்கிடணும் என திட்டம் போட்டது. முதல்வர் தலைவரின் சாதூர்யத்தால் அமைச்சரை தமிழ்நாட்டில் இருந்து நகர்த்த கூட முடியவில்லை. தலைவர் மு.க.ஸ்டாலினை அசைத்து பார்க்க அவர் மகன் மீது அமலாக்கத்துறை பாய பார்த்தது.
துளி கூட அஞ்சவுமில்லை அமைச்சரை விட்டுக் கொடுக்கவும் இல்லை. அமைச்சர் பதவியையாவது பறித்து நிர்மூலமாக்க வேண்டும் என்று அதே கொங்கு சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை டெல்லி பாஜக மூலம் அழுத்தம் கொடுக்க பார்த்தார். செந்தில் பாலாஜி உழைப்பிற்கான அங்கீகாரம் அமைச்சர் பொறுப்பு. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என பகிரங்கமாகவே அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.
மற்றொரு கொங்கு சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை அரசியல் யூடியூப் புரோக்கர் சவுக்கு சங்கர் வைத்து அமைச்சர் கரூர் மாவட்டத்தில் 380 கோடிக்கு புது வீடு கட்டுகிறார் என கிளப்பிவிட்டார் அவர் மூன்று துறைக்கு அமைச்சராக இருந்த வரை டாஸ்மாக் கடைகளில் பாட்டில் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுதுனு சவுக்கு சங்கரை வச்சு பரப்பினார் அண்ணாமலை. மின்சாரத் துறையில் கட்டணம் அதிகம் என அவதூறு பரப்பி விட்டார். நிலக்கரி அதிக விலைக்கு வாங்கப்பட்டது என்றான். ஆனால் இன்று உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மோடி தனது நண்பர் அதானிக்காக செயற்கையான நிலக்கரி தட்டுபாட்டை உருவாக்கி அதிகமான விலைக்கு விற்ற ஆதாரங்கள் வெளிவந்தது. அடுத்து BGR நிறுவனத்தை வைத்து மீது அவதூறு பரப்பினார் அண்ணாமலை.
இதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒன்றுகூட இதுவரை இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மற்ற கொங்கு சமூகத்தைச் சேர்ந்த அதிமுக – பாஜக அரசியல்வாதிகளுக்கு அப்படி என்ன கோபம்? ஒரே கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லி பாஜகவுடன் சேர்ந்துகொண்டு இப்படி அடக்குமுறையை ஏவும் அளவுக்கு அப்படி என்ன குரோதம்?
செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த போது கூட எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, M.R.விஜயபாஸ்கர், செங்கோட்டையன் தம்பிதுரை பற்றி ரகசியங்களை வைத்து அவர்களை பலி வாங்கினாரா? இல்லை. ஜனநாயக ரீதியாக தேர்தலில் அதிமுக எதிராக பிரச்சாரத்தின் மூலம் தான் தோற்கடித்தார்.
2019ல் அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் போது எடப்பாடி தன் அமைச்சரைவை மொத்தத்தையும் இறக்கி செந்தில்நாதனுக்காக வேலை பார்த்தும் தோற்றுப் போனார் பழனிசாமி.
அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்த்து தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, வேலுமணி, செந்தில்நாதன், அண்ணாமலை என மொத்த கூட்டமும் டெல்லிக்கு மண்டியிட்டு பழிவாங்கி இருக்கிறது. பதவிக்காக, தங்களின் இயலாமைக்காக நாளை இந்த கூட்டம் தான் சார்ந்த சமூகத்தை ஏன் தங்களுக்கு வாக்களித்த பிற சமூகத்தைச் சேர்ந்த மக்தளையோ பலி கொடுக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
மற்றவர்களை காட்டிலும் ஆயிரம் மடங்கு உழைப்பாளி, அறிவாளி, திறமைசாலி, எதிரியை களத்தில் சந்திக்கும் தைரியசாலி செந்தில் பாலாஜி. களத்திற்கு மீண்டும் வருவார் பழையபடி மீண்டும் களத்தில் மக்கள் பணியாற்றுவார்.
ஞானசேகரன் அசோகன் – திமுக வலைப்பதிவு எழுத்தாளர்