அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

1008 பெண்கள் பங்கேற்ற மோடி பொங்கல் விழா!

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ’தமிழ்நாடு தலை நிமிர தமிழனின் சுற்றுப் பயணம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி, மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். இந்த சுற்றுப் பயணம் நேற்று புதுக்கோட்டையில் நிறைவு பெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார்.

இதற்காக அமித்ஷா, அந்தமான் நிக்கோபார் தீவில் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்று மதியம்  புறப்பட்டு மாலை  திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பிறகு விமான நிலையத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பிறகு திருச்சி விமான நிலையத்திற்கு வெளியே காரில் வருகை புரிந்த போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அப்பொழுது தொண்டர்கள் அமித்ஷாவை பார்த்து கை அசைத்து ஆரவாரம் செய்தனர். பதிலுக்கு அவரும் கை அசைத்து அனைவருக்கும் வணக்கம் கூறினார்.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

திருச்சியில் களைகட்டிய 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' - அமித் ஷா வாழ்த்து  'மிஸ்' ஆனதால் பெண்கள் அதிருப்தி!தொண்டர்கள் மாதா கி ஜே என்று கோஷம் எழுப்பினார்கள். பிறகு அங்கிருந்து இந்திய விமானப் கார் மூலம் புறப்பட்டு  புதுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் புதுக்கோட்டையில் ’தமிழ்நாடு தலை நிமிர தமிழனின் சுற்றுப்பயணம்’ பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

அதன் பின்  புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர சொகுசு விடுதிக்கு இரவு  வருகை புரிந்தார். பிறகு அங்கு தமிழ்நாடு பாஜகவின் உயர்மட்டக் குழு மற்றும் மையக் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதில், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்த ஆலோசனைகளை அமித்ஷா வழங்கினார். பிறகு இரவு ஒட்டலில் ஓய்வு எடுத்தார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

மோடி பொங்கல் விழா

பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்ற கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு நம்ம ஊரு மோடி பொங்கல் விழா என்ற விழாவை ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருச்சியில் மோடி பொங்கல் விழாவை கொண்டாட பாஜகவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பிரம்மாண்டமான மோடி பொங்கல் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருச்சியில் களைகட்டிய 'நம்ம ஊரு மோடி பொங்கல் விழா' - அமித் ஷா வாழ்த்து  'மிஸ்' ஆனதால் பெண்கள் அதிருப்தி!இதற்காக ராணுவ மைதானம் சுத்தம் செய்யப்பட்டு 1008 பெண்கள் பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் செய்து விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மோடி பொங்கல் விழாவில் பொங்கல் வைக்கும் பெண்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டு பெண்கள் அனைவரும் காலை 9 மணி முதல் மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அவர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் பொங்கல் வைத்த பிறகு அங்குள்ள மேடையில்  அமித்ஷா சிறப்புரை ஆற்றும் வகையில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் மைதானத்தில் மேடைக்கு வலது, இடது புறத்தில் பெண்கள் பொங்கல் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடுவில் அமித்ஷா வருகை புரிந்து மேடை அருகே செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம், இதற்கிடையில் இரவு ஓய்வு எடுத்த மத்திய மந்திரி அமித்ஷா இன்று காலை தங்கியிருந்த தனியார் நட்சத்திர சொகுசு ஒட்டலில் இருந்து காரில் புறப்பட்டு திருச்சி கலெக்டர் அலுவலகம் மத்திய பேருந்து நிலையம் டோல்கேட் வழியாக திருச்சி சென்னை பைபாஸ் சாலை வழியாக திருவானைக்காவல் சென்றார். திருவானைக்காவல் கோவிலுக்கு சென்ற மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி சன்னதிகளில் மத்திய மந்திரி அமித்ஷா மனம் உருகி வழிபட்டார். இதைத்தொடர்ந்து திருவானைக்காவலில் இருந்து கொள்ளிடம் பஞ்சக்கரை சென்று திருவரங்கம் வடக்கு வாசல் வழியாக திருவரங்கத்திற்கு வந்தார்.

திருவரங்கம் ரெங்கா ரெங்கா கோபுரம் அருகில் அமித்ஷாவிற்கு திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதை செய்தனர். பிறகு கோவிலுக்குள் சென்ற அமித்ஷா பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளை வணங்கினார். அப்பொழுது அமித்ஷா பெருமாளை பார்த்து பயபக்தியுடன்  சாமி கும்பிட்டார். பிறகு தாயார் சன்னதிக்கு சென்று அம்பாளை வணங்கினார். இதையடுத்து சக்கரத்தாழ்வார் சன்னதி,ராமானுஜர் சிலை சன்னதிக்கு சென்று வணங்கினார்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு  ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நம்பெருமாளை  தரிசனம் செய்து வணங்கினார்.

இதைத்தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு  காரில் ஏறி வெளியே வந்தார். அப்பொழுது கோவில் வளாகத்தில் அமித்ஷாவை காண திரண்டு இருந்த பக்தர்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு காரில் புறப்பட்டு சாலை வழியாக மீண்டும்கொள்ளிடம் பஞ்சகரைவழியாக திருச்சி சென்னை பைபாஸ் வந்து டோல்கேட் வழியாக கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஒட்டலுக்கு வருகை புரிந்தார். அங்கு நிர்வாகிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். பிறகு மீண்டும் காரில் புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் பாலம் வழியாக ராணுவ மைதானத்தை வந்தடைந்து மோடி பொங்கலை தொடங்கி வைத்தார்.

இதைபடுத்து விழா நடைபெறும் மைதானத்திற்குள் அமித்ஷா கார் சென்றது. அப்பொழுது மைதானத்தில்  பொங்கல் வைக்க கூடியிருந்த 1008 பெண்கள், அவரது குடும்பத்தினர், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்றனர். அவர்களை பார்த்து அமித்ஷா கை அசைத்தார்.

திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்புபிறகு மேடை அருகே பெரிய பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சென்ற அமித்ஷா தயாரித்து வைக்கப்பட்டிருந்த பொங்கலை கரண்டி மூலம் கிண்டி பொங்கலோ பொங்கல் என்று கோஷம் போட அங்கு கூடியிருந்த 1008 பெண்கள்,பொங்கலிட்டு படைத்தனர். அப்பொழுது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று போட்டு பொங்கல் வைத்தனர். பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடையில் மத்திய மந்திரி அமித்ஷா சிறப்புரை ஆற்றினார்.

அதன் பின்பு இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றார். பிறகு திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பு துறைக்கு சொந்தமான  விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய மந்திரி அமித்ஷா திருச்சி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.மேலும் அமித்ஷா விழா நடந்த மன்னார்புரம் ராணுவ மைதானம் முழுவதும் பாஜக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.