திண்டுக்கலில் சிறுவர்கள் ஓட்டிய 10க்கு மேற்பட்ட டூவீலர்கள் பறிமுதல் ! போலீஸ் அதிரடி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திண்டுக்கலில் சிறுவர்கள் இயக்கிய 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்  பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி எச்சரிக்கை. மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மருத்துவர். பிரதீப்  உத்தரவின் பெயரில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்  சிபின் அவர்களின் அறிவுரைபடியும், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி, உதவி ஆய்வாளர் திலிப் குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் நகரில் அதிக அளவில் சிறுவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கப்படுவதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 10க்கும் மேற்பட்ட இளம் சிறார்களின் வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

டூவீலர் ஓட்டியவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் மேலும் 18 வயது உட்பட்ட சிறுவர்களிடம் இனி எக்காரணம் கொண்டும் வாகனத்தை கொடுக்ககூடாது என்றும் மீறி கொண்டுக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என பெற்றோர்களை எச்சரித்தார் போக்குவரத்து காவல் ஆய்வாளர்  தட்சிணாமூர்த்தி இவரின் இந்த செயல் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

-ராமதாஸ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.