திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்.. காவிரி மேம்பால போக்குவரத்தில் கூடுதல் கவனம் வேண்டும் … கோரிக்கை வைக்கும் மக்கள் நீதி மய்யம்.!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்.. காவிரி மேம்பால போக்குவரத்தில் கூடுதல் கவனம் வேண்டும் … கோரிக்கை வைக்கும் மக்கள் நீதி மய்யம்.!

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

திருச்சி மாவட்டம் காவிரி மேம்பாலம் தற்பொழுது சீரமைக்கப்படுவதால் இரு சக்கர வாகனத்தை தவிர ஏனைய போக்குவரத்து சேவை மேற்படி காவிரி பாலத்தில் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது வரவேற்பிற்குறியது. ஆனால் மேற்படி காவிரி மேம்பாலத்தின் வழி அனுமதிக்கப்படும் இருசக்கர போக்குவரத்து முறைபடுத்தபடாததால் (12.09.2022) ந் தேதி திங்கட்கிழமை காலை அப்பாலத்தின் வழியே தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்பவர்களும், அலுவலக பணிக்கு செல்பவர்களும் அனுபவித்த இன்னல்கள் சொல்ல முடியாதவை. மேலும் மேற்படி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சியிலிருந்து – ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீரங்கத்திலிருந்து-திருச்சிக்கும் சென்ற வாகன ஓட்டிகள் காவிரி மேம்பாலத்தில் கிடைத்த இடத்திலெல்லாம் புகுந்து சென்றதை நம்மால் காணமுடிந்தது. மேலும் மன்னன் படத்தில் வரும் ரஜினி- கவுண்டமணி நகைச்சுவை காட்சி போல காவிரி பாலத்தில் இந்த கரையிலிருது அந்த கரைக்கு சென்றவர்களை பார்க்கும் பொழுது செயின், மோதிரம் காமெடி தான் நினைவுக்கு வந்தது, அந்த மக்களின் பரிதாபநிலை.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Trichy
Trichy

மேலும் திருச்சி To ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் To திருச்சிக்கு இருசக்கர வாகனங்களில் மேற்படி மேம்பாலத்தில் செல்பவர்களுக்கு தனி தனியாக வழித்தடத்தை பேரிகாட் உள்ளிட்ட தடுப்புகளை கொண்டு அமைத்து தருவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கும், சாகச பயணத்திற்கும் தீர்வாகும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். மேலும் நேற்று போக்குவரத்து மாற்றப்பட்ட காவிரி மேம்பால போக்குவரத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்ததையும் இங்கு கவனிக்கவேண்டும்.எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் மேற்படி காவிரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்ல இரு வழிகளிலும் தனி தனி வழித்தடம் (எதிர்-எதிர் இல்லாமல்) அமைத்து தரவேண்டும். மேலும் மேற்படி மேம்பால பணி முடியும் வரை தினம்தோறும் காலை, மாலை நேர பீக் ஹவர்ஸ்களில் சிறப்பு உயர் காவல் அதிகாரிகளை பொறுப்பு அதிகாரிகளாக நியமிப்பதோடு, மேற்படி பீக்ஹவரஸ்களில் போக்குவரத்து போலிசாருடன், சட்டம் மற்றும் ஒழுங்கு, ஊர்காவல் படை, சிறப்பு இளைஞர் படை உள்ளிட்ட கூடுதல் போலிசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம் என வக்கீல்.S.R.கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.