திரைப்பட பாணியில் காதல் திருச்சி வாலிபர் போக்சோவில் கைது.
திரைப்பட பாணியில் காதல் திருச்சி வாலிபர் போக்சோவில் கைது.
திருச்சி மதுரை மெயின் ரோடு எடமலைபட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் ஜெமினி கணேசன் (20), ஆட்டோ டிரைவரான இவர் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார் அப்போது அங்கு ஒரு கடையில் வேலை பார்த்து வந்த அம்பிகா(17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.) எனும் சிறுமி உடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 25/12/2020 அன்று எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என்று புகார் வந்ததையடுத்து சிறுமியை போலீசார் தேடி வந்த நிலையில் சிறுமி காதலன் ஜெமினி கணேசனுடன் சென்றது தெரியவந்தது இருவரையும் கண்டுபிடித்து பின்னர் சிறுமிக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மேலும் சம்பந்தப்பட்ட ஜெமினி கணேசன் மீது கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கினை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
*ஜித்தன்*