முகநூலில் பழகி ஆபாச படம் கல்லூரி மாணவி தற்கொலை – மிரட்டியவர் கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் கடந்த மாதம் 29-ந்தேதி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக, தனது சாவுக்கு காரணமான நபர் குறித்து அந்த மாணவி கடிதம் எழுதி வைத்திருந்தார்.

 

இதையடுத்து போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதுடன் அந்தப் பெண் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 29) என்பது தெரியவந்தது.

 

 

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இதையடுத்து வளநாடு போலீசார் அங்கு சென்று வாலிபரை பிடித்து, வளநாடு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட வாலிபர் சமூக வலைத்தளங்களின் மூலம் பெண்களை கண்டறிந்து அவர்களிடம் நட்பாக பேசி செல்போன் எண்ணை பெற்று அதன் பின்னர் அவர்களை தன்வசப்படுத்தி வந்துள்ளார். அப்படி, தான் இந்த மாணவியிடமும் பேசி, புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாக கூறி மிரட்டி உள்ளார். ஆனால் அனைத்து விவரங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அவர் மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது.

 

 

நீங்கள் வேலை பெறுவது எளிது...

பின்னர் போலீசார் ராமராஜின் செல்போனை பார்த்த போது அதில் அனைத்து வீடியோ, புகைப்படம் என எல்லாம் அழிக்கப்பட்டிருந்தது. இறந்த மாணவி சிறுமி என்பதால் ராமராஜ் மீது போக்சோ மற்றும் தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.