விருதுநகர் – புதிய மேம்பால பணிக்காக வினோதமான  பூமி பூஜை போட்ட MP மாணிக்கம் தாகூர் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில்  இருந்து படந்தால், வெம்பக்கோட்டை பகுதிகளுக்கு செல்ல தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரி, மதுரை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் கடந்த செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி ரூ. 31 கோடி மதிப்பில் மேம்பால பணிக்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வினோதமான பூமி பூஜைஇந்த மேம்பால பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்வில் விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், நகர் மன்ற தலைவர்  குருசாமி, திமுக ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், மதிமுக மாநகரச் செயலாளர் கணேஷ் குமார், காங்கிரஸ் நகர தலைவர் ஐயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அப்போது பூமி பூஜைக்காக முறையான ஏற்பாடு செய்யாமல், ஏற்கனவே அங்கு இருந்த பழைய நெடுஞ்சாலை துறை அளவு கல்லில் எம்.பி.மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து பூமி பூஜை போட்டதால் அருகில் இருந்தவர்கள் இந்த நிகழ்வை சற்று வினோதமாக பார்த்தனர்.

 

—  மாரீஸ்வரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.