மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் மே10-24)
மிஸ்டர் ஸ்பை
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் உள்ள திருச்சபையின் பங்கு தந்தையாக இருக்கும் அந்த ‘செல்வ’நாயகன் லீலைகளின் மன்னனாம். இவர் கால்பதித்த திருச்சபைகளில் எல்லாம், ‘கோபியர் கொஞ்சும் ரமணாவாக’ தனது லீலைகளால் தடம் பதிப்பவராம்.
தற்போது திருச்சியில் திருமணமான ஒரு பெண்ணுடன் ஜாலியாக காரில் வலம் வரும் அந்த ‘ஷேர்ஃபாதர்’ திருப்பலி தொடங்கும் வரை அந்த பெண்ணின் குழந்தையுடன் விளையாடி நிஜத் தந்தையாகிவிடுகிறாராம்.
ஆன்மீக ஆடையில் இவர் செய்யும் அட்ராசிட்டியை தாங்க முடியாமல் புகார் அளிக்க பங்கு மக்கள் அணிதிரட்டி வருகின்றனராம்.