மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் மே 25-ஜீன் 9)
பத்திரிகைகளுக்கோ, மீடியாக்களுக்கோ பேட்டி கொடுப்பதை விரும்பாதவர் அந்த ‘வெற்றி’ நடிகர். ஆனாலும் பிரஸ் பீப்பில்ஸுடன் குட் ரிலேஷன்ஷிப் இருக்க வேண்டும் என நினைப்பவர். இதனால் தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் பிரஸ் ரிப்போர்ட்டர்களை கவனிக்கச் சொல்லி, வெயிட்டான தொகையை, தனது பி.ஆர்.ஓ.ரியாஸிடம் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் சமீபத்திய ‘மிருகம்’ படத்திற்காக நடிகர் கொடுத்த மிகப்பெரிய தொகையை ஒரே அமுக்காக அமுக்கிவிட்ட ரியாஸ், தனக்கு நெருக்கமான நிருபர்கள், தனது சமூக நிருபர்கள் சிலருக்கு மட்டும் லட்சங்களை வாரியிறைத்துவிட்டு, மற்றவர்களுக்கு சமோசாவும் டீயும் மட்டும் கொடுத்தாராம். இதை இப்போது ஸ்மெல் பண்ணிய சீனியர் நிருபர்கள் சிலர் சோஷியல் மீடியாக்களில் ரியாஸை நாறடித்து வருகிறார்கள்.