மொய் விருந்தின் – மறைக்கப்பட்ட பக்கம் !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

மொய்விருந்து

போன வாரம் கடையில் வேலை பார்க்கும் தம்பியொருத்தன் தன்னுடைய வீட்டின் மொய் விருந்திற்கான பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தான். கையில் வாங்கிப் பார்த்தேன், நான்கு குடும்பங்கள் சேர்ந்து நடத்தினார்கள் அதை. மறைந்த அவனுடைய அப்பாவின் பாஸ்போர்ட் அளவு கருப்பு, வெள்ளைப் படத்தைப் பத்திரிகையில் போட்டு, “என் அப்பா பெயரில் இருக்கும் மொய். எங்களால் ஒரு சிலருக்கு நாலைந்து முறை வரைக்கும் செய்யப்பட்டிருக்கிறது” என அச்சடிக்கப்பட்டிருந்தது.

இன்னொரு படத்திற்குக் கீழே, “நான் மறுபடியும் 2000 வருடத்திற்குப் பிறகு இப்போதுதான் உங்களைச் சந்திக்கிறேன். அதனால் மொய் நோட்டை முறையாகத் திருப்பிப் பார்த்துவிட்டு வரவும்” என அச்சடிக்கப்பட்டிருந்தது. அவனுடைய அப்பாவின் படத்தைச் சுட்டிக் காட்டி, “அவரு இருக்கற வரைக்கும் பின்னாடி எனக்கு ஆத்திர அவசரத்துக்கு ஆகும்ணு நிறைய மொய் செஞ்சு வஞ்சிருக்காரு. ஏதோ ஐஞ்சு லட்சம் ரூபாய் வரை வரும்னு எங்கம்மா சொல்லிச்சு” என்றான்.
தம்பிக்குப் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் ஒரு கிராமம். அங்கே பத்து செண்ட் அளவில் நிலமொன்றை வாங்குகிறான். அது அவனது பூர்வீகக் கோயிலை ஒட்டிய நிலம் என்பதால், நிலம் பிறருடைய கைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால், ஊரே சேர்ந்து அவனை வாங்கச் சொல்லி வறுபுறுத்துகிறது. அதனால் தன் சக்திக்கு மீறி அந்த நிலத்தை வாங்குவதென்று முடிவெடுத்து விட்டான். தன்னுடைய பெண் பிள்ளைக்குப் பின்னால் அந்த நிலம் உதவிகரமாக இருக்கும் என்பதும் ஒருகாரணம்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கையில் சுற்றிமுற்றிப் புரட்டியவகையில் ஒன்றரை லட்சம் தேறியது. இன்னும் அவனுக்கு ஆறு இலட்சம் ரூபாய் பணம் வேண்டும். கடந்த மூன்று மாதங்களாகவே நிலத்தை விற்பவர்கள் சீக்கிரம் கிரயம் பண்ணச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை வைகாசி மாதம் வரை காத்திருக்கச் சொல்லி இப்போது மூன்று பேரோடு இணைந்து அந்த மொய் விருந்தை வைத்திருக்கிறான். அதற்கான பத்திரிகையைத்தான் என்னிடம் வந்து கொடுத்தான். மொய் விருந்து என்றதுமே என்னை முதலில் ஈர்த்தது, மட்டன்தான். கடா விருந்துக் குழம்புகளின் மகிமை அப்படி. முதலில் அதைப் பற்றியே சுற்றிச் சுற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.
”நூத்தம்பது கிலோ மட்டன் சார். முன்னூறு கிலோ அரிசி. வெட்டுரவறே திருச்சிக்கு வந்து ஆட்டை பிடிச்சுத் தர்றேன்னு சொல்லிருக்காரு. சிக்கன் போட மாட்டோம். மட்டன் சாப்பிடாதவங்களுக்கு மட்டும் சைவச் சாப்பாடு” என விவரித்தான்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

மொய்விருந்து முடிந்த பின் அவனை அழைத்து விசாரித்தேன். கொஞ்சம் சோர்வாக இருந்தான். “என்னத்த சொல்ல? வீட்டுக்கே குழம்பு கிடைக்கலை. ஆயிரத்து ஐநூறு பேர்கிட்ட வந்திட்டாங்க. மொய் செய்யாதவங்களும் சாப்பிட வருவாங்கள்ள. வர்றவங்களை எப்படி வராதீங்கன்னு சொல்ல முடியும் சார். நிறையப் பேருக்கு காணலை. கொஞ்சம் மனவருத்தம் வேற சிலருக்கு” என்றான். அவனுக்கு ஆன வசூல் நிலவரம் பற்றிக் கேட்டேன். “நேத்து மொய் விருந்தில மூனுநாற்பது கலெக்ட் ஆச்சு சார். இன்னைக்கு காலையில வர முடியாதவங்க வந்து செஞ்ச வகையில ஒரு முப்பதாயிரம் ரூவா வந்திருக்கு. மிச்சத்தை இனிமே போய்க் கேட்டு வாங்கணும். எனக்குத்தான் அதிகத் தொகை வந்திருக்கு. என் கூட நடத்துன மிச்ச ஆள்களுக்கு என்னைவிடக் கம்மிதான்” என்றான். “இப்ப வீட்டுக்கு வர்றவங்களுக்கு என்ன செய்வீங்க” என்றேன். “வெறும் கலர் வாங்கித் தருவோம். அம்புட்டுதான்” என்றான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே. மொய் விருந்தைப் பற்றி என் பத்திரிகையுலகக் காலத்தில் எதிர்மறையான பார்வையே எனக்கு இருந்தது. எதையும் எதிர்மறையாகப் பார்த்துப் பரபரப்படைவதே ஒரு பத்திரிகையாளனின் அடிப்படை குணம் என எண்ணிக் கொண்டிருந்தேன் அப்போது. ஆனால் இன்றைக்கு இந்தக் கதையோடு மொய் விருந்து என்கிற ஒரு நிகழ்த்துதலை நினைத்துப் பார்க்கையில் வேறு ஒரு பார்வை கிடைக்கிறது.

3

பேராவூரணி பக்கம் முதலில் இந்த மொய்விருந்து துவங்கியதாகச் சொல்கிறார்கள். இது இப்போது தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள் வரை பரவிவிட்டது. சில இடங்களில் இதற்குப் பெயர் ‘வசந்த விழா’வாம். தொழிலுக்கோ இன்னபிற காரணங்களுக்காகவோ நிதி திரட்ட விரும்புபவர்கள் இது போன்ற மொய் விருந்தை வைக்கிறார்கள். அவருடைய சொந்தங்கள், தெரிந்தவர்கள் அவ்விருந்தில் வைக்கும் மொய்யைக் கொண்டு தனது நிதியைத் திரட்டுகிறார். ஒருத்தர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையே மொய் விருந்து வைக்க முடியும்.

இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் அவர் தனக்கு மொய் வைத்தவர்களுக்குத் திரும்பிச் செய்ய வேண்டும். ஆயிரம் ரூபாய் வைத்திருந்தால் அதற்குக் கொஞ்சம் மேலே போட்டு ஆயிரத்து ஐநூறு என்றோ, இரண்டாயிரம் என்றோ வைக்க வேண்டும். இதைப் ‘புதுநடை’ என்று சொல்வார்கள். ஆயிரத்து ஒரு ரூபாய் வைத்தால் தங்களுடைய மொய் உறவுக் கணக்கை அத்தோடு முறித்துக் கொள்வதாக அர்த்தம்.

4

-சரவணன் சந்திரன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.