அங்குசம் பார்வையில் ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’     

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ஜோவிகா விஜயகுமார். கன்சீவ்டு & டெலிவர்ட்’ [ அதாங்க டைரக்‌ஷன்கிறத டைட்டிலில் இப்படித்தான் போட்டார்கள். அதை நம்மால் தமிழில் எழுதத் தெரியல] வனிதா விஜயகுமார். ஆர்டிஸ்ட் : வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, பவர் சீனி, ஃபாத்திமா பாபு, ஸ்ரீமன், செஃப் தாமு, கும்தாஜ், கணேஷ் & ஆர்த்தி கணேஷ், அனுமோகன், செளம்யா, ஷர்மிளா, காயத்ரி ரேமா மற்றும் பத்துப் பதினைந்து பேர். ஒளிப்பதிவு : தாய்லாந்துக்கு ராஜபாண்டி, சென்னைக்கு விஷ்ணு ராமகிருஷ்ணன், துபாய்க்கு டி.ஜி.கபில், இசை : ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங் : பாலகுரு. பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.

40 வயசாகியும் குழந்தை பிறக்கலையேன்னு [ அட கல்யாணம் ஆன பிறகுதாங்க ] கவலை வனிதாவுக்கு. 45 வயசுல புள்ள பெத்து என்னாகுப் போகுதுன்னு அலட்சியம் வனிதாவின் புருஷன் ராபர்ட்டுக்கு. “இண்டெஹோல் பண்ணும் போது[ அட இதுவும் படத்துல டாக்டரா நடிச்ச காயத்ரி ரேமா சொன்னதுதாங்க. அந்தக் கருமத்தை இதுக்கும் மேல நாம சொல்லக்கூடாதுங்க ] சில விஷயங்கள் ஒர்க்-அவுட்டாகணும்” என புரட்சி டாக்டர் சொல்றார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

‘மிஸ்சஸ் & மிஸ்டர்’      ஷகிலா உட்பட பத்துப் பதினஞ்சு பேரை தாய்லாந்துக்கு தள்ளிட்டுப் போய் படம்கிற பேர்ல படு அருவெறுப்பான, ஆபாசக் குப்பையை அள்ளிக்கிட்டு வந்து இங்குள்ளவர்களின் தலையில் கொட்டப் பார்த்திருக்கிறார் வனிதா விஜயகுமார் என்ற மோசமான, கேவலமான டைரக்டர். ஆனால் தமிழ்நாடு தியேட்டர் முதலாளி புண்ணியவான்கள் வனிதாவின் வக்கிரத் திட்டத்தை முறியடித்திருப்பார்கள் என நம்புகிறோம்.

இதற்கு மேல் இந்தப் படத்தை விமர்சித்தால் ரொம்ப விகாரமாப் போயிரும். நமக்கு ஆங்காரம் அதிகமாகும். பி.பி.,சுகர் ஏறிப்போயிரும்.  படத்துக்கு மார்க் ஒரு கேடு?

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

 —    மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.