முன்விரோத கொலை ! ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அரசலூர், மல்லிகை நகரைச் சேர்ந்த லூர்து வசந்தன் 30/25, த.பெ மனோகரன் என்பவரின் குடும்பத்திற்கும். அரசலூர். தெற்கு தெருவை சேர்ந்த விஜயராகவன் 37/25, த.பெ சுப்பிரமணி என்பவரின் குடும்பத்திற்கும் இடையே இடப்பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 06.11.2018-ம் தேதி அரசலூர் தெற்கு தெரு வழியாக மேற்படி லூர்து வசந்தன் அவரது அக்கா ஹேமா மற்றும் சகோதரர் விமல் @ விமல் லாரன்ஸ் 24/18 த.பெ மனோகரன் ஆகியோர் நடந்து சென்றபோது மேற்படி விமல் @ விமல் லாரன்ஸ் 24/18 த.பெ மனோகரன் என்பவரை, எதிரிகள் 1. விஜயராகவன் 37/25, த.பெ சுப்பிரமணி 2. வளர்மதி 63/25 க.பெ சுப்பிரமணி 3. வசந்தகுமார் 49/25 த.பெ சுப்பிரமணி ஆகியோர் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேற்படி இறந்து போன விமல் @ விமல் லாரன்ஸ் என்பவரின் சகோதரர் லூர்து வசந்தன் 30/25 என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்படி எதிரிகள் மீது தொட்டியம் காவல் நிலைய குற்ற எண்.287/18, U/s 302 IPC ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (ADJ-II) நடைபெற்று வந்தது.

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பரமணியன் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்  (23.07.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் (ADJ-II) அவர்கள் எதிரி-1 விஜயராகவன் 37/25, த.பெ சுப்பிரமணி மற்றும் எதிரி-3 வசந்தகுமார் 49/25 த.பெ சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய். 1000 அபராதமும், எதிரி-2 வளர்மதி 63/25 க.பெ சுப்பிரமணி என்பவரை வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் தொட்டியம் காவல் நிலைய நீதிமன்ற பெண் தலைமை காவலர் வளர்மதி ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.