‘சின்னக்குயில்’ சித்ரா வின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!
திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்று ‘சின்னக்குயில்’ சித்ரா என மக்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாக தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், பிரம்மாண்ட இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
சித்ரா வின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
‘கே.எஸ்.சித்ரா லைவ் கன்வெர்ட்’ என்ற பெயருடன் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி பிப்ரவரி 08-ஆம் தேதி நடக்கவுள்ளது. இதை அறிவிக்கும் வகையில் ஜனவரி 28 மதியம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பேசியோர்…
E Lounge Events வெங்கட்
“இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா.
அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில் நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி. இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கனரா வங்கி ஐசக் ஜானி
“சித்ரா அம்மா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் யாருமே இல்லை. இந்த நிகழ்வை எங்களது கனரா வங்கி ஸ்பான்சர் செய்வது எங்களுக்குப் பெருமை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி”.
Noise & Grains மஹாவீர்
“எங்களது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் எப்போதும் துணை நிற்கிறீர்கள் நன்றி. சித்ரா அம்மா எப்போதும் பாஸிடிவிட்டி தருவார். நம் தமிழக மக்கள் போல இசை நிகழ்வை ரசிப்பது யாருமில்லை. எல்லாவிதமான இசையையும் ரசிப்பார்கள். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சித்ரா அம்மாவிற்கு நன்றி. E Lounge Events மற்றும் கனரா வங்கிக்கும் நன்றி”.
‘சின்னக்குயில்’ சித்ரா
“நீங்கள் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ரூபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள்”.
— மதுரை மாறன்.