மதுரை வாடிப்பட்டி தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை தேனூரில் முதல் அறுவடை நெல்லை கோட்டை கட்டி அழகர் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நிகழ்வில் பாரூக் பீர் முகமது என்ற முஸ்லிம் விவசாயி இந்த ஆண்டு தை முதலில் அறுவடை செய்த தனது நெல்லை கள்ளழகர் கோவிலுக்கு கோட்டை கட்டி அனுப்பி வைத்தார் …

மதுரை-தேனூர் சுந்தரவல்லி அம்மன் கோவில்

Frontline hospital Trichy

மதுரை-தேனூர் சுந்தரவல்லி அம்மன் கோவில்

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் தை முதல் தேதிக்கு பின்பு நடைபெறும் முதல் அறுவடை நெல்லை அழகர் கோவிலில் உள்ள நெல் களஞ்சியத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்வு கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தோன்றுதொட்டு நடந்து வருகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த நிகழ்வானது ஜாதி மத பேதம் இன்றி இந்து கிறிஸ்தவர், முஸ்லிம் என யார் முதல் அறுவடை   செய்தாலும் அவர்கள் கிராமத்திற்கு 7 முதல் 8 நெல் மூட்டைகளை வழங்கி பின்பு கிராம தொழிலாளி மூலம் அழகர் கோயிலுக்கு கொண்டு சென்று அங்குள்ள நெற்களஞ்சியத்தில் ஒப்படைப்பார்.

அதற்கு பின்பு அங்குள்ளவர்கள் தேனூர் கிராமத்திற்கு மரியாதை செய்து அனுப்புவார்கள் தற்போதைய காலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தேனூர் கிராமத்தில் இருந்த எஸ் வி சிக்கந்தர் பிச்சை என்ற முஸ்லிம் தனது நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டி அனுப்பி வைத்த அன்று முதல் வருடம் தோரும் தை முதல் தேதியில் அறுவடை செய்யும் நபரின் நெல் கோட்டை கட்டி அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த நிகழ்ச்சியானது தேனூர் சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேனூர் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உட்படபலர்கலந்து கொண்டனர். இதுகுறித்து கிராம கரைகாரர் முத்துநாயகம் கூறுகையில்,

மதுரை மாவட்டம் வடக்கு தாலுகா தேனூர் கிராமத்தில் சுந்தரவல்லி அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் கோட்டை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. கோட்டை கட்டுவது என்பது தை மாதம் முதல் தேதி ஆவதற்குள் விளையும் நெற்கதிர்களை விவசாயிகள் அறுத்துக் கொள்ளலாம்.

தை பிறந்து விட்டால் அவர்கள் எவ்வளவு பெரிய வசதியானவர்களாக ஆனாலும் சரி ஏழையானாலும் சரி அவர்கள் இஷ்டத்திற்கு தேனூர் கிராமத்தில் கதிர் அறுக்க முடியாது அதற்கு பதிலாக அழகர் மலையான் கோவிலுக்கு நெல்லை கோட்டை கட்டி இங்கிருந்து ஏழு முதல் எட்டு மூடை  நெல்லை கிராமத்திற்கு செலவு பண்ணி அதாவது ஜாதி மதம் பார்க்காமல் வழங்க வேண்டும் என்பது மரபு.

அதே போல் இந்த ஆண்டு முஸ்லிம் விவசாயியான பாரூக் பீர் முகமது என்பவர் தன் விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் கொட்டி கோட்டை கட்டி உள்ளார்.  இதே மாதிரி கிறிஸ்தவர் ஆனாலும் இந்துவா ஆனாலும் தை 1ம் தேதிக்கு அப்புறம் கதிர் அறுக்குறதா இருந்தா கிராமத்துல கூப்பிட்டு எல்லாவற்றையும் சொல்லி நாங்க கோட்டை கட்டிய மாதிரி கட்டி இந்த  நெல்லை கிராமத்து தொழிலாளி தலை சுமையாக அழகர் மலை கோவிலுக்கு கொண்டு சென்று ஒப்படைப்பார் தற்போது வாகன வசதிகள் பெருகி விட்டதால் வாகனத்தில் போய் கொண்டு சேர்க்கும் நடைமுறை உள்ளது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அன்று முதல் இன்று வரை தோன்றுதொட்டு இந்த நிகழ்வை செய்திட்டு வருகிறோம் முக்கியமாக ஜாதி மத பேதம் இன்றி தேனூர் கிராமத்தில் நெல் கோட்டை கட்டும் நிகழ்வு இந்த ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெற்றது இவ்வாறு கூறினார்.

 

—  ஷாகுல், படங்கள் :ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.