மதுரை அமொிக்கன் கல்லூரியில் முத்தையா அம்பலம் நினைவு கைபந்து போட்டி…
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 31வது முத்தையா அம்பலம் நினைவு மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில 14 அணிகள் கலந்து கொண்டன. தொடர்ந்து 31 வருடங்கள் நடைபெற்று வந்த முத்தையா அம்பலம் நினைவு கைபந்து போட்டி அமெரிக்கன் கல்லூரி கைப்பந்து மைதானங்களில் நடைபெற்றது.
சென்னை, கோவை, திருச்சி, காரைக்குடி, கோவை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரையில் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

வீக் பிரிவிற்கு சென்னை லயோலா கல்லூரி, கோவை கற்பகம் பல்கலைக்கழகம், மதுரை அமெரிக்கன் கல்லூரி, STC பொள்ளாச்சி அணிகள் தகுதி பெற்றன.
பைனலில் சென்னை லயோலா கல்லூரி 3-1 (26-20, 25-23, 24-26, 25-19) என்ற கணக்கில் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தினை வென்று 31வது முத்தையா அம்பலம் நினைவு கோப்பையம், முதல் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.25000 த்தை பெற்றது.
கோவை கற்பகம் பல்கலைக்கழகம், இரண்டாம் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.15000 த்தை பெற்றது.
மூன்றாம் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ 10000 த்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியும், STC பொள்ளாச்சி நான்காம் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.7000 த்தையும் பெற்றது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இறுதியாக நடைபெற்ற பரிசளிப்பு அமெரிக்கன் கல்லூரி துணை முதல்வர் மார்டீன் டேவிட் வரவேற்புரை வழங்கினார். முதல்வர் டாக்டர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையுரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினராக ராஜலிங்கம் கண்காணிப்பாளர் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி, மதுரை விமான நிலையம் சிறப்புரை வழங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பையும் வழங்கினார். உடற்கல்வி துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.