துறையூர் அருகே தளுகை பாதர் பேட்டை பகுதியில் மர்ம விலங்கு கடித்து குதறியதில் நான்கு ஆடுகள் பலி!
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தளுகை பாதர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன் லாரி டிரைவராக உள்ள இவர் தனக்கு சொந்தமான ஒட்டகம் மேடு என்ற பகுதியில் இரு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
அதே பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று இரவு ஆடுகளை கம்பி வேலி போட்ட பட்டிக்குள் அடைத்து வைத்துவிட்டு வீடு சென்று உள்ளார்.

இன்று காலை வயலுக்கு சென்று பார்த்த பொழுது நான்கு ஆடுகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அறிவழகன் கால்நடைத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் இறந்தனவா அல்லது வெறி நாய்கள் கடித்து ஆடுகள் இறந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் விவசாய நிலம் அருகே கோழிப்பண்ணை ஒன்று உள்ளதாகவும் அதில் இறந்து போகும் கோழிகளின் இறைச்சிகளை வயல்வெளியை தூக்கி எறிவதால் அவற்றை உண்பதற்காக வெறிநாய்கள் அப்பதியில் சுற்றி வருவதாகவும் இதனால் வெறிநாய்களால் ஆடுகள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுபோல் சம்பவம் அடிக்கடி அப்பகுதியில் நடைபெறுவதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்நடை வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
— ஜோஷ்.