நாதக என்றொரு கட்சியும் சோடை போகாத ஜோம்பிகளும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாதக என்றொரு கட்சியும் சோடை போகாத ஜோம்பிகளும் ! “சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச்‌ சேர்ந்த செ.சேவியர் ஃபெலிக்ஸ் (00314533420) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை‌ மீறி செயல்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ‌ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

சேவியர் ஃபெலிக்ஸ்
சேவியர் ஃபெலிக்ஸ்

யார் இந்த சேவியர் ஃபெலிக்ஸ்? எதற்காக இந்த ஒழுங்கு நடவடிக்கை?

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

காதலித்து கரம் பிடிப்பதாக சொல்லி எந்த பெண்ணையும் ஏமாற்றி கட்சிக்கு களங்கம் விளைவித்திருப்பாரோ? பண்டைய தமிழ் மரபு சொற் களஞ்சியங்களில் இருந்து எடுத்தாளப்பட்ட, இப்போது பீப் சொல் என்பதாக அருவெறுப்பாக கருதப்படும் வார்த்தைகளை எவர் மீதும் அள்ளி வீசியிருப்பாரோ? ஏலியன்ஸ்களோடு ஏரோப்பிளைனில் ஏதென்ஸ் நகருக்கு ஒன்றாக பயணித்த வரலாற்று பயண இரகசியங்களையெல்லாம் போட்டு உடைத்திருப்பாரோ? குண்டு மழை பொழிந்தபோதும் பதுங்குக்குழியில் படையல் போட்டு விருந்து படைத்த அண்டை நாட்டுடனான இராணுவ இரகசியங்களையெல்லாம் கசிய விட்டிருப்பாரோ? அப்படி என்னதான் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் சேவியர் ஃபெலிக்ஸ்?

இதெல்லாம் கிடக்கட்டும். முதலில் யார் இந்த சேவியர் ஃபெலிக்ஸ்? ஆதார் எண்ணை போல, அதிபர் கட்சியின் உறுப்பினர் எண்ணால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறதை பார்த்தால் ஏதோ குக்கிராமம் ஒன்றின் கடைநிலை முரட்டு தொண்டனாக இருந்திருப்பாரோ?

என்ன இப்பவே கண்ண கட்டுதா? அட இன்னும் சப்ஜெக்ட்டுக்குள்ளேயே‌ போகல பாஸ்.

சேவியர் ஃபெலிக்ஸ்- ங்கிறவரு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர். நாற்பது ஆண்டுகள் வழக்கறிஞர் தொழில் அனுபவம் கொண்டவர். நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையின் மாநில செயலாளர். முன்னாள் முதல்வர் கலைஞருடனும் இப்போதைய முதல்வர் ஸ்டாலினிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

நீக்கப்பட்ட சேவியர் ஃபெலிக்ஸ்
நீக்கப்பட்ட சேவியர் ஃபெலிக்ஸ்

தமிழ் தேசியத்தின் மீதான மாளா காதல் கொண்டு விடுதலைப்புலிகள் பிரபாகரனை ஆதர்ச நாயகனாக ஏற்றுக் கொண்டவர். அண்ணன் சீமான் அரசியலில் கால் தடம் வைத்த காலத்தில் இருந்து ஒன்றாக பயணித்தவர். கட்சிக்காக உழைத்தவர். கட்சிக்காக செலவழித்தார். அப்படியே, அண்ணனுக்காகவும் சில பல இலட்சங்களை செலவழித்தவர். எவரிடமும் அதிர்ந்து பேசாதவர். எதுனாலும் நீங்கள் பார்த்து செய்யுங்கனு அண்ணனே சொல்ற அளவுக்கு நம்பிக்கையா இருந்தவரு.

2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் இப்போதைய முதல்வர் ஸ்டாலினை‌ எதிர்த்து போட்டியிட்டவர். 2021 இல் அவரது மகன் கமிலஸ் செல்வா போட்டியிட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு நாம் தமிழர் கட்சியுடனும் அண்ணன் சீமானுடனும் நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருந்து வந்த சேவியர் ஃபெலிக்ஸுக்கு பகுமானமாக அண்ணன் சீமான் கொடுத்த வெகுமானம் தான் அந்த பதினொரு இலக்க எண்.

அண்ணன் சீமானும் சாட்டை துரை முருகனும் நடத்திய தேன் தமிழ் பேச்சுக்களை விடவா விரசமாக பேசிவிட்டார் சேவியர் ஃபெலிக்ஸ். கட்சி தொண்டனின் சொத்தை அபகரித்துக் கொண்டாரா? இல்லை கடல் கடந்து வாழும் தமிழ் உறவுகளிடம் வசூல் செய்து பணத்தை ஏப்பம்தான் விட்டாரா? அப்படி என்னதான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டார்.

‘சாட்டை’ துரைமுருகன்
‘சாட்டை’ துரைமுருகன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தொடங்கிய பிரச்சினை. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரை “சண்டாளன்” என்று சாதிய இழிவு கொண்ட சொல் கொண்டு சாட்டை துரைமுருகன் பேசிய அவதூறு பேச்சுக்காக கைது செய்யப்பட்டார். திருச்சியை சேர்ந்த ஒருவர் தொடுத்த வழக்கில் திருச்சி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்ததற்காக எஸ்.பி.வருண்குமாரை வறுத்தெடுத்தார்கள் தம்பிகள்.

இதற்கிடையில், தொடர்ச்சியாகவே பல்வேறு ஆடியோக்களை வெளியிட்டு பகிரங்கமாகவே அதை ஆதரித்தும் பேசி வரும் திருச்சி சூர்யா சாட்டை துரைமுருகன் பேசிய ஆடியோக்களையும் ரிலீஸ் செய்திருந்தார். உடனே முஷ்டியை‌ தூக்கிக் கொண்டு கிளம்பிய தம்பிகள், திருச்சி எஸ்.பி.வருண்குமார்தான் அந்த ஆடியோக்களை வெளியிட்டு விட்டார் என்று அவரிடம் பாயத் தொடங்கினார்கள்.

இதற்கும் பிள்ளையார் சுழி போட்டது அண்ணன் சீமான் தான். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வரம்பு மீறி பேசியுமிருந்தார் சீமான்.

இந்த வரம்பு மீறிய பேச்சுக்காக தனிப்பட்ட முறையில் எஸ்.பி. வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் பதில் நோட்டீஸை சேவியர் ஃபெலிக்ஸ் எஸ்.பி.க்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நோட்டிசை தனக்கு தெரிவிக்காமல், அனுப்பி விட்டதாக குற்றஞ்சாட்டிதான் அவரை கட்சியிலிருந்தே நீக்கியிருக்கிறார் சீமான்.

“’வருண்குமார் எஸ்.பி. மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்றும் அவர் வளர்ந்து வரும் அதிகாரி டிஜிபி வரைக்கும் அவர் போவார்’ என்றும் பாராட்டிவிட்டு, “சாட்டை துரைமுருகனிடம் வருண்குமாரின் ஜாதி இது என்று ஒரு காவல் அதிகாரி கூறியதாக என்னிடம் சொன்னதை நான் பேசிவிட்டேன். அவரது ஜாதி எது என்று அது குறித்து என்னவென்றே எனக்குத் தெரியாது”’ என்று விளக்கம் அளித்ததாக ஒரு கடிதம் வெளியானதற்காக இந்த நடவடிக்கை.

சீமான் பேச்சு
சீமான் பேச்சு

உண்மையில், “எஸ்.பி.யிடம் சீமான் மன்னிப்பு கேட்டதாகவும் … மண்டியிட்டதாகவும் … “ திமுகவினர் உள்ளிட்டு பலரும் ட்ரோல் செய்ய, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற‌ அண்ணன் சீமான் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துவிட்டார் என்கிறார்கள்.

அட போங்கயா… ஒருபக்கம் நெஞ்சம் பொங்க ஆத்திரம் முட்டினாலும் இன்னொரு பக்கம் எழும் சிரிப்பை எந்தப்பக்கம் வெளியிடுவதென்று தெரியாமல் தடுமாற வைத்துவிட்டார் அண்ணன் சீமான்.

அந்த ஆடியோவில் அவ்வளவு அசிங்கம் அசிங்கமாக பேசியிருக்கிறார்கள் அண்ணன் சீமானும் தம்பி சாட்டையும். காது குளிர அவர்கள் கோத்தபய ராஜபக்ஷேவையா வசை பாடினார்கள்? தனித்த அடையாளத்தோடு உங்களாலே பெரும் ஆளுமையாக முன்னிறுத்தப்பட்ட காளியம்மாளை. அவர்கள் என்ன இஸ்ரேலில் போரை நிறுத்த வேண்டும் என்றா கலந்துரையாடினார்கள்? அப்பட்டமான அரசியல் டீலிங்குகள். பண விவகாரங்கள்.

அந்த ஆடியோக்களை கேட்ட பின்னரும் வராத ஆத்திரம்… இவர்தான் வெளியிட்டார் என்று‌ போலீசு அதிகாரி மீது ஏற்படுகிறதென்றால் இவர்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அடேய், இப்போவாச்சும் அந்த ஆடியோவை வெளியிட்டீங்களேனு திருச்சி சூர்யாவிடம் ஆளுயர மாலையோடு நின்றிருக்க வேண்டாமா? உண்மையோ, பொய்யோ அதிகாரப் பூர்வமாக ஆதரிக்க முடியாவிட்டாலும் எஸ்.பி. வருண் குமாருக்கு மானசீகமாக ஒரு கும்பிடு போட்டிருக்க வேண்டாமா?

இவ்வளவு பெரிய ஃபர்னிச்சரை அவ்வளவு அசால்ட்டாக போட்டு உடைத்திருக்கிறார்களே என்ற ஆரவாரத்திற்குப் பதிலாக, அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வசவுகளால் எஸ்.பி.யையும் அவரது குடும்பத்தையும் வன்மம் கொண்டு தாக்கியிருப்பதில் இருந்து ஒரு விசயம் புரிகிறது.

சீமான்
சீமான்

நாதக தம்பிகளிடம் இனி சூதானமாகத்தான் உறவாட வேண்டும். எசகு பிசகாக எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடந்து விடலாம் என்ற அச்சம்தான் காரணம்.

“ரெண்டு ஆம்பிளைங்களுக்கு நடுவுல அந்த அம்மா படுத்து கிடக்கு”னு வெண்பா தமிழில் பேசியவரை தலைவராக கொண்ட தம்பிகளிடத்தில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்கிறீர்கள்?

– புளியம் விளாறு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.