நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : நிலமாகவா? பணமாகவா? எளிய தீர்வு எது ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : நிலமாகவா? பணமாகவா? எளிய தீர்வு எது? – நியோமேக்ஸ் விவகாரத்தில் 5ஏ செட்டில்மெண்ட் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக பல்வேறு தகவல்கள் வந்தவண்ணமிருக்கின்றன. நிலமாக பெறுவதில் உள்ள சிக்கல்களையும், நியோமேக்ஸ் இயக்குநர்கள் இந்த விவகாரத்தை எப்படி தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார், சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி.

மேலும், எந்தவிதமான இழப்புகளும் இல்லாத, சட்டரீதியாக அமைந்த அனைவருக்குமான தீர்வை நோக்கி முன்னெடுக்கும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கும் அவர், விருப்பமுள்ளவர்கள் தங்களோடு இணைந்து செயல்பட வருமாறும் அழைப்பு விடுக்கிறார், ராமமூர்த்தி.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நியோமேக்ஸ் ராமமூர்த்தி.
நியோமேக்ஸ் ராமமூர்த்தி.

இதோ, இனி அவரது வார்த்தைகளிலேயே … “நியோ மேக்ஸ் குழும நிறுவனங்களில் முதலீடு செய்து அதை திரும்ப பெற இயலாமல் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள அன்பு சகோதர, சகோதரிகளே! இப்பொழுது நம் அனைவருக்கும் இருக்கும் தடுமாற்றம் என்னவென்றால் நிலமாக தீர்வு பெறுவதா, இல்லை பணமாக தீர்வு பெறுவதா என்பது தான்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நிலமாக தீர்வு வேண்டும் என்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள வழக்கைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

1. வழக்கு நடந்து கொண்டிருப்பது : மதுரையில் உள்ள 39-Special District Judge For TNPID Act. நீதி மன்றத்தில்.
2. Case number:
OA/6/2024.
3. Date: 16/04/2024.
4. CNR Number: TNMD180001732024.
4. Next Hearing date: 04/09/2024.
5. Petitioner: Mr. Veerappan.
6. Respondents: EOW, DRO, Neomax properties Pvt Ltd, S. Balasubramanian, S.Kamalakannan & B. Balamurugan.
இந்த வழக்கு பல முறை பதில் மனு தாக்கல் செய்வதற்காக வாய்தா போடப்பட்டுள்ளது. ஆனால் respondents யாரும் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கின் அடுத்த வாய்தா தேதி: 04/09/2024.

இந்த வழக்கை தாக்கல் செய்த மனுதாரரின், மனுவின் நகலை நான் ஏற்கெனவே வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளேன்.
Vishal Swarnaboomi at Ahanoor village, Vadipatti Taluk, Alanganallur Sub- registration District, Madurai North Registration District.
Survey No. 561 & 562. Total house plot 34. இதற்கான அரசு வழி காட்டி மதிப்பின் மொத்த தொகை ரூபாய் 8 கோடி. (பத்திரப் பதிவு கட்டணம் சேர்ந்து ரூ 9 கோடி). அரசு வழிகாட்டி மதிப்பு மற்றும் விற்பனை மதிப்பு சதுர அடிக்கு ரூ 500. என்று பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒப்பந்த எண்: 2283/2023 தேதி: 11/05/2023 & 2284/2023 தேதி: 12/05/2023.

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் நியோமேக்ஸ் நிறுவனம் அரசு வழி காட்டி மதிப்பில் தான் நில விற்பனை ஒப்பந்தம் செய்துள்ளது, அதன்படி தான், பணம் வங்கிகள் மூலமாக பெற்றுள்ளது. இந்த நிலத்தின்
சந்தை மதிப்பு சதுர அடிக்கு ரூபாய் 1200 என்று அட்வகேட் கமிஷனர்கள் மூலமாக செய்து முடிக்க இருந்த 5A
செட்டில்மென்ட்டின் போது கொடுக்கப்பட்டிருந்த விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்பொழுதும் அந்த விலைக்குத்தான் கொடுப்போம் என நிறுவனம் கூறுகிறது. அதாவது ஒரே சர்வே எண்ணில் உள்ள நிலம், நிறுவனத்தார்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களுக்கு, சதுர அடிக்கு ரூபாய் 500, மற்றவர்களுக்கு சதுர அடிக்கு ரூபாய் 1200 என விலை நிர்ணயம் செய்துள்ளது. நிலமாக தீர்வு என்றால், இது மாதிரி, ஒரு தலை பட்சம், மற்றும் பாகுபாடுடன் (பாரபட்சம்) இருக்கும் என்பதற்கு இது உதாரணம்.

நியோமேக்ஸ் பாலா
நியோமேக்ஸ் பாலா சார்

இந்த வழக்கில் இதுவரை அரசு மற்றும் நிறுவனத்தார்களின் தரப்பிலிருந்து எந்த வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழக்கின் தீர்ப்பு, ஒரு வேளை மனுதாரருக்கு சாதகமாக அமைந்தால், அதனை வைத்து அனைவருக்கும் நிலமாகவே அரசு வழிகாட்டி மதிப்பில் உடனடியாக தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அனைவரும் கேட்க ஆரம்பித்தால் நிறுவனம் மற்றும் அரசு எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிடும். இந்த வழக்கின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

5A செட்டில்மென்ட் பற்றி தங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என ஒரு தரப்பு மார் தட்டிக் கொண்டிருக்கிறது. அவர்களால் ஒரு பத்திரப் பதிவுக்கு கூட முறையாக ஏற்பாடு செய்து முடிக்க இயலாது என்பதை உறுதியாக கூற முடியும். நிறுவனத்தார்கள் சிலர் ஜாமீனில் உள்ளனர். அதை நியாயப் படுத்துவதற்காக, ஏதோ ஒன்றை செய்து கொண்டிருப்பதாக காட்டிக் கொண்டு, காலதாமதப் படுத்திக் கொண்டிருப்பதை பலர் புரிந்து கொண்டுள்ளனர்.

நியோமேக்ஸ் பாலாவும் அவர் தம்பியும்
நியோமேக்ஸ் பாலாவும் அவர் தம்பியும்

நிலம் மூலம் முறையான தீர்வு கொடுக்க இயலாது என்பதை நன்கு அறிந்தவர்கள்; புகார் கொடுக்காதவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். நிலம் மூலமாக தீர்வு என்றால், அது அரசு வழிகாட்டி மதிப்பில் தான் இருக்க வேண்டும் என்ற முடிவில் அனைவரும் உறுதியாக இருந்தால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீர்வு, பணமாக கொடுக்கப்படும் என்பதை அறிவித்து விடுவார்கள். அதன்பின் இப்பொழுது இருக்கும் மனக் குழப்பத்திற்கு விடை கிடைத்து விடும்.

முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம். ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடந்து கொண்டிருக்கிறது. எல்லாம் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த நிறுவனங்களின் சொத்துக்கள், நிர்வாகிகளின் சொத்துக்கள் மற்றும் பினாமிகள் பெயர்களில் உள்ள சொத்துக்களின் விவரங்களை எனக்கு அனுப்பி வைக்கவும்.

என்னுடைய பட்டியலில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அதனை சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பின் விற்ற சொத்துக்களையும் கைப்பற்ற வேண்டும். 5A செட்டில்மென்ட்டிற்கு பயன்படுத்த பட்டியலிடப்பட்ட சொத்துக்களையும் attachment பட்டியலில் சேர்க்க வேண்டும். பொதுவாக அனைத்து சொத்துக்களையும் கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நியோமேக்ஸ் எம்.டி. பாலா
நியோமேக்ஸ் எம்.டி. பாலா

மூத்த வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் படி நிறுவனத்தின் சொத்துக்களை தனியாகவும், நிர்வாகிகளின் சொத்துக்களை தனியாகவும், பினாமிகள் பெயரில் உள்ள சொத்துக்களை தனியாகவும் பிரித்து மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

மனுவில் குறிப்பிட வேண்டிய கோரிக்கைகள் ஏதேனும் விடுபட்ட இருந்தால் அதனை தெரியப்படுத்தவும். இயன்றளவு நல்ல கோரிக்கைகளை வைத்து நமக்கு சாதகமான தீர்ப்பை பெற நம்மால் இயன்ற முயற்சி செய்வோம். ஒரு மனுவில் நிறைய கோரிக்கைகளை வைப்பதா, இல்லை கோரிக்கைகளின் தன்மையை பொருத்து தனி, தனி மனுவாக தாக்கல் செய்வதா என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம்.

வழக்கறிஞரின் கட்டண செலவுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறோம். அதை சமயத்தில் வழக்கு வெற்றி பெறவும் முறையாக மனுவை தயார் செய்ய வேண்டும். நம் எதிரிகள் பண பலம் மற்றும் ஆள் பலம் கொண்டவர்கள். எதிரிகளை எப்படி நீதி மன்றத்தில் சமாளிப்பது என்பதையும் மனதில் வைத்து செயல்படுகின்றோம்.

நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண்பதற்கு விரும்புபவர்களின் பெயர்களை மனுதாரர்கள் பட்டியலில் சேர்த்து இந்த மனு மூலமாக அனைத்து மனுதாரர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையும் வைக்கப்படும். நீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டால் நல்லது இல்லையென்றால் அது புகார் கொடுத்த அனைவரின் சார்பாக பொது நலன் அடிப்படையில் ஏற்றுக் கொண்டாலும் சரி.

அதனால் மனு தார்கள் பட்டியலில் சேர் விரும்புபவர்கள் திருச்சி வெங்கடேசன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் (கைபேசி எண்: 8883840038). என்பதாக குறிப்பிடுகிறார், பொறியாளர் சிவகாசி ராமமூர்த்தி.

– அங்குசம் புலனாய்வுக் குழு.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.